Saturday, February 22, 2020

63) எழுத்தின் பிறப்பு - பொது விதி


எழுத்தின் பிறப்பு - பொது விதி

The Production Of Letter Sounds

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


காதால்
கேட்கப்படுவதும்
வாயால்
பேசப்படுவதும்

எழுத்தின்
ஒலி வடிவம்


கண்ணால்
காணப்படுவதும்
கையால்
எழுதப்படுவதும்

எழுத்தின்
வரி வடிவம்


எழுதப்படுவதனால்
எழுத்து என்று
அழைக்கப்படும்

அதன்
(எழுத்தின்)
பிறப்பு
குறித்து


இங்கு


சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்,


நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.




🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




62) எழுத்தின் முறை

எழுத்தின் முறை

The Way How The Alphabet Is Arranged

சிறப்பினாலும்
இனத்தினாலும்

ஒன்றன்பின்
ஒன்றாக
பொருந்தி

இவ்வுலகில்

அகரம்
முதலாக
தொன்றுதொட்டு
வழங்குதலே

எழுத்தின்
முறையாம்


விளங்கக்கூறின்


உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
உயிரெழுத்தின்
சிறப்பு

உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
மெய்யெழுத்தின்
சிறப்பின்மை

சிறப்பும்
சிறப்பின்மையும்
கருதி

உயிர் எழுத்து
முன்னும்
மெய் எழுத்து
பின்னும்
வைக்கப்பட்டன


அவ்வாறே


குறிலெழுத்தின்
விகாரமே
நெடிலெழுத்து
என்பதால்

குற்றெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
நெட்டெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


இதனைப்
போன்றே


வலியாரை
முன்வைத்து
மெலியாரை
பின்வைத்தல்
மரபு
என்பதால்

வல்லெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
மெல்லெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


வல்லெழுத்து
மெல்லெழுத்து
உணர்ந்தாலன்றி
இடையெழுத்து
உணரலாகாது
என்பதால்

அச்சிறப்பின்மை
கருதி
ஓரினமான
இடையெழுத்து
ஆறும்

அவற்றின்
பின்
வைக்கப்பட்டன


மேலும்


ற் ன் என்பன
கலப்பொலிகளாக
அமைந்துள்ள
சிறப்பின்மையால்

இடையெழுத்து
இவ்விரு (ற், ன்)
எழுத்துகளுக்கு
முன்னர்
இடமளிக்கப்பட்டு
ற் ன் எழுத்துகள்
இறுதியில்
வைக்கப்பட்டன


என்பது


எழுத்தின்
முறையாம்



நன்னூல்
சூத்திரம்-73


சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே

சிறப்பினும் இனத்தினும் செறிந்துஈண் டுஅம்முதல்
நடத்த ல்தானே முறைஆ கும்மே

சிறப்பினாலும் இனத்தாலும் பொருந்தி
இங்கு அகரம் முதலாக வழங்குதல்தான்
எழுத்தினது முறை ஆகும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




61) இனவெழுத்து


இனவெழுத்து

Relative Letter

எழுத்தின்

பிறப்பு, முயற்சி
அளவு, பொருள்
வடிவு
ஆகிய இவற்றுள்

ஒன்று முதலாக
ஒரு வகையில்
சார்ந்தும் ஒத்தும்
அமைவது

இனவெழுத்து


இனமில்லாத
ஐகார (ஐ)
ஔகாரங்கள் (ஔ)

ஈகார (ஈ)
ஊகாரங்களுக்கு (ஊ)
இனமாகிய
இகர (இ)
உகரங்களை (உ)

தமக்கு
இனமாகப்
பொருந்த

உயிர் எழுத்து
பன்னிரண்டும்
மெய் எழுத்து
பதினெட்டும்
ஆகிய
முப்பது
முதலெழுத்துகள்

இரண்டிரண்டு
ஓரினமாகி
வருவது

தொன்றுதொட்டு
வழங்கி வரும்
முறைமை


அவ்வகையில்


அ - ஆ
இ - ஈ
உ - ஊ
எ - ஏ
இ - ஐ
ஒ - ஓ
உ - ஔ


க் - ங்
ச் - ஞ்
ட் - ண்
த் - ந்
ப் ம்

ய் - ர்
ல் வ்
ழ் ள்

ற் - ன்

என
இனமாய் வரும்


அதாவது


இடத்தாலும்
முயற்சியாலும்

உயிரெழுத்துகளுள்

குறிலுக்கு
(அ, இ, உ, எ, இ, ஒ, உ)
நெடிலும்
(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)


முயற்சியாலும்
மாத்திரையாலும்

மெய்யெழுத்துகளுள்

வல்லினத்திற்கு
(க், ச், ட், த், ப், ற்)
மெல்லினமும்
(ங், ஞ், ண், ந், ம், ன்)

இனமாய் வரும்


இடத்தாலும்
மாத்திரையாலும்

இடையினம்
(ய், ர், ல், வ், ழ், ள்)
ஆறும்
ஓரினமாம்


வடிவால்

ஐ - இ

ஒழிந்த
மற்ற உயிர்கள்

ஒ - ஓ

இனமாய் வரும்


பொருளால்


அது, ஆது
இங்கு, ஈங்கு
உங்கு, ஊங்கு
எது, ஏது
ஒடு, ஓடு
குளக்கரை, குளங்கரை
மட்குடம், மண்குடம்
வேயல், வேரல்

போல்வன
இனமாய் வரும்




நன்னூல்
சூத்திரம்-71


ஐஔ இஉச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே

ஐஔ இஉச் செறிய முதலெழுத்
துஇவ்விரண் டுஓர்இன ம்ஆய்வரல் முறையே

(இனமில்லாத) ஐகார ஔகாரங்கள்
(ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய)
இகர உகரங்களை (தமக்கு இனமாகப்)
பொருந்த முதலெழுத்துகள் இரண்டு இரண்டு
ஓரினமாகி வருதல் முறை



நன்னூல்
சூத்திரம்-72


தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே

தானம் முயற்சி அளவு பொருள்வடி
வுஆனஒன் றுஆதிஓர் புடைஒப் புஇனமே

எழுத்தின் பிறப்பு, முயற்சி, அளவு, பொருள்,
வடிவு ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக
ஒரு வகையில் சார்ந்தும் ஒத்தும் அமைவது
இனவெழுத்து / இன எழுத்து



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




60) வினாவெழுத்து


வினாவெழுத்து

Interrogative Letter

எ யா
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்

ஆ ஓ
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லுக்கு ஈற்றிலும்

என்னும் எழுத்து
சொல்லுக்கு
முதலிலும் ஈற்றிலும்

தனித்து நின்று
வினாப் பொருள்
உணர்த்தி வந்தால்

வினாவெழுத்து

என்று
பெயரிட்டு
அழைக்கப்பெறும்



ஒரு சொல்லின்
அகத்தே நின்று
வினாப்பொருளை
உணர்த்துவது

அகவினா


(உ-ம்)


சொல்லுக்கு முதலில் வரும்
அகவினா

எ யா எழுத்துகள்

எவன்/எவள்/எவர்கள்/எது/எவை
யாவன்/யாவள்/யாவர்/யாது/யாவை

ஏ எழுத்து

ஏவன்/ஏவள்/ஏவர்/ஏது/ஏவை



ஒரு சொல்லின்
புறத்தே நின்று
வினாப்பொருளை
உணர்த்துவது

புறவினா


(உ-ம்)


சொல்லுக்கு முதலில் வரும்
புறவினா

எ யா எழுத்துகள்

எம்மனிதன் (எ + மனிதன்)
யாங்ஙனம் (யா + ஙனம்)


சொல்லுக்கு ஈற்றில் வரும்
புறவினா

ஆ ஓ எழுத்துகள்

கொற்றனா (கொற்றன் + ஆ)
கொற்றனோ (கொற்றன் + ஓ)

ஏ எழுத்து

கொற்றனே (கொற்றன் + ஏ)



மேலும்


வினாவெழுத்து
குறித்து
நினைவில்
கொள்ள வேண்டியவை


சொல்லுக்கு
முதலில்
அகவினா
புறவினா
ஆகிய
இரண்டும் வரும்


சொல்லுக்கு
ஈற்றில்
அகவினா வராது

அதாவது

சொல்லுக்கு
ஈற்றில் வரும்
வினாவெல்லாம்
புறவினாவாம்


ஏகாரம்
முதலில்
வரும்போது
அகவினாவாக
மட்டுமே வரும்
புறவினாவாக
வராது



நன்னூல்
சூத்திரம்-67


எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே

எயா முதலும் ஆஓ ஈற்றும்
ஏஇரு வழியும் வினாஆ கும்மே

எ யா எனும் எழுத்துகள்
சொல்லின் முதலிலும்
ஆ ஓ எனும் எழுத்துகள்
சொல்லின் ஈற்றிலும்
ஏ எனும் எழுத்து
சொல்லின் முதலிலும் ஈற்றிலும்
வினாப் பொருளில் வந்தால்
வினாவெழுத்து / வினா எழுத்து


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




59) சுட்டெழுத்து


சுட்டெழுத்து

Demonstrative Letter

உயிர்போலத்
தானே
இயங்கவல்ல

அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ

என்னும்
அகரம் முதலாகிய
பன்னிரண்டு
எழுத்து

உயிரெழுத்து
(உயிர் எழுத்து)


அவற்றுள்


அ இ உ
என்னும்
மூன்று எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்
தனித்து
சுட்டுப் பொருள்
உணர்த்தி வந்தால்

சுட்டெழுத்து

என்று
பெயரிட்டு
அழைக்கப்பெறும்


இங்கு


அ என்னும் எழுத்து
(அகரம்)

பேசுவோனுக்கும்
கேட்போனுக்கும்
சேய்மையில் / தொலைவில் உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்

சேய்மைச் சுட்டு


இ என்னும் எழுத்து
(இகரம்)

பேசுவோனுக்கு
அண்மையில் / அருகில் உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்

அண்மைச் சுட்டு


உ என்னும் எழுத்து
(உகரம்)

கேட்போனுக்கு
அண்மையில் / அருகில் உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்

அதாவது

சேய்மைக்கும்
அண்மைக்கும்
இடையில்
உள்ளதைச்
சுட்டுவதால்

இடைமைச் சுட்டு


இதுவே
பொதுவான
மரபு


இதன்
அடிப்படையில்


ஒரு சொல்லின்
அகத்தே நின்று
சுட்டுப்பொருளை
உணர்த்துவது

அகச்சுட்டு

(உ-ம்)

அவன்/அவள்/அவர்கள்/அது/அவை
இவன்/இவள்/இவர்கள்/இது/இவை
உவன்/உவள்/உவர்கள்/உது/உவை


ஒரு சொல்லின்
புறத்தே நின்று
சுட்டுப்பொருளை
உணர்த்துவது

புறச்சுட்டு

(உ-ம்)

அம்மனிதன் (அ + மனிதன்)
இம்மனிதன் (இ + மனிதன்)
உம்மனிதன் (உ + மனிதன்)



நன்னூல்
சூத்திரம்-66


அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே

அஇ உம்முதல் தனிவரின் சுட்டே

அ இ உ என்னும் மூன்றும்
சொல்லுக்கு முதலில் (அகத்தும் புறத்தும்)
தனித்து சுட்டுப் பொருளில் வந்தால்
சுட்டெழுத்து / சுட்டு எழுத்து


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




58) எழுத்தின் பெயர்


எழுத்தின் பெயர்

The Name Of The Letter

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து;

அது

முதல் எழுத்து
சார்பு எழுத்து
என
இரு வகையாம்


உயிர் எழுத்து
மெய் எழுத்து

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
ஆகிய
இவ்விரண்டும்

பல
பொருளுக்குப்
பொதுப் பெயர்
ஆகியும்

ஒவ்வொரு
பொருளுக்கே
சிறப்புப் பெயர்
ஆகியும்
வருவனவாம்


அவ்வகையில்


அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ

என்னும்
அகரம் முதலாகிய
பன்னிரண்டும்

உயிர்போலத்
தானே
இயங்கவல்லது
என்பதால்

உயிரெழுத்து
என்றும்


க் ங் ச் ஞ் ட் ண்
த் ந் ப் ம் ய் ர்
ல் வ் ழ் ள் ற் ன்

என்னும்
ககரம் முதலாகிய
பதினெட்டும்

உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
என்பதால்

மெய்யெழுத்து
என்றும்

சொல்லுவர்
அறிவுடையோர்


அவற்றுள்


அ இ உ எ ஒ
என்னும்
ஐந்து எழுத்துகள்
குறுகி ஒலித்தலால்

குறிலெழுத்து / குற்றெழுத்து
என்றும்


ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
என்னும்
ஏழு எழுத்துகள்
நீண்டு ஒலித்தலால்

நெடிலெழுத்து / நெட்டெழுத்து
என்றும்


அ இ உ
என்னும்
மூன்று எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்
தனித்து
சுட்டுப் பொருள்
உணர்த்தி வந்தால்

சுட்டெழுத்து
என்றும்


எ யா
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லின் முதலில்
அகத்தும் புறத்தும்

ஆ ஓ
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லின் ஈற்றிலும்

என்னும் எழுத்து
சொல்லின்
முதலிலும் ஈற்றிலும்

தனித்து நின்று
வினாப் பொருள்
உணர்த்தி வந்தால்

வினாவெழுத்து
என்றும்


க் ச் ட் த் ப் ற்
என்னும்
ஆறு எழுத்துகள்
வன்மையாய்
ஒலித்தலால்

வல்லினம் / வல்லெழுத்து /
வன்கணம்
என்றும்


ங் ஞ் ண் ந் ம் ன்
என்னும்
ஆறு எழுத்துகள்
மென்மையாய்
ஒலித்தலால்

மெல்லினம் / மெல்லெழுத்து / மென்கணம்
என்றும்


ய் ர் ல் வ் ழ் ள்
என்னும்
ஆறு எழுத்துகள்
வன்மைக்கும்
மென்மைக்கும்
இடைப்பட்டு
ஒலித்தலால்

இடையினம் / இடையெழுத்து / இடைக்கணம்
என்றும்


எழுத்தின்

பிறப்பு, முயற்சி
அளவு, பொருள்
வடிவு
ஆகிய இவற்றுள்

ஒன்று முதலாக
ஒரு வகையில்
சார்ந்தும் ஒத்தும்
அமைவது

இனவெழுத்து
என்றும்


பெயரிட்டு
அழைக்கப்பெறும்.



நன்னூல்
சூத்திரம்-63


அம்முத லீரா றாவி கம்முதன்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்

அம்முத ல்ஈர்ஆ றுஆவி கம்முதல்
மெய்ம்மூ ஆறுஎன விளம்பினர் புலவர்

அகரம் முதலாகிய பன்னிரண்டு
உயிர் என்றும் ககரம் முதலாகிய
மெய் பதினெட்டு என்றும்
சொல்லுவர் அறிவுடையோர்.



நன்னூல்
சூத்திரம்-64


அவற்றுள்,
அஇ உஎ ஒக்குறி லைந்தே

அவற்றுள்,
அஇ உஎ ஒக்குறி ல்ஐந்தே

அவற்றுள்,
அ இ உ எ ஒ என்னும் ஐந்தும்
குறில் எழுத்து / குற்றெழுத்து



நன்னூல்
சூத்திரம்-65


ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில்

ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழும்
நெடில் எழுத்து / நெட்டெழுத்து



நன்னூல்
சூத்திரம்-66


அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே

அஇ உம்முதல் தனிவரின் சுட்டே

அ இ உ என்னும் மூன்றும்
சொல்லுக்கு முதலில் (அகத்தும்
புறத்தும்) தனித்து சுட்டுப் பொருளில்
வந்தால் சுட்டெழுத்து / சுட்டு எழுத்து



நன்னூல்
சூத்திரம்-67


எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே

எயா முதலும் ஆஓ ஈற்றும்
ஏஇரு வழியும் வினாஆ கும்மே

எ யா எனும் எழுத்துகள்
சொல்லின் முதலிலும்
ஆ ஓ எனும் எழுத்துகள்
சொல்லின் ஈற்றிலும்
ஏ எனும் எழுத்து
சொல்லின் முதலிலும் ஈற்றிலும்
வினாப் பொருளில் வந்தால்
வினாவெழுத்து / வினா எழுத்து



நன்னூல்
சூத்திரம்-68


வல்லினங் கசட தபறவென வாறே

வல்லினம் கசட தபறஎன ஆறே

வல்லினம் என்பது
க் ச் ட் த் ப் ற் என்னும் ஆறு



நன்னூல்
சூத்திரம்-69


மெல்லினம் ஙஞண நமனவென வாறே

மெல்லினம் ஙஞண நமனஎன ஆறே

மெல்லினம் என்பது
ங் ஞ் ண் ந் ம் ன் என்னும் ஆறு



நன்னூல்
சூத்திரம்-70


இடையினம் யரல வழளவென வாறே

இடையினம் யரல வழளஎன ஆறே

இடையினம் என்பது
ய் ர் ல் வ் ழ் ள் என்னும் ஆறு



நன்னூல்
சூத்திரம்-72


தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே

தானம் முயற்சி அளவு பொருள்வடி
வுஆனஒன் றுஆதிஓர் புடைஒப் புஇனமே

எழுத்தின் பிறப்பு, முயற்சி, அளவு, பொருள்,
வடிவு ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக
ஒரு வகையில் சார்ந்தும் ஒத்தும் அமைவது
இனவெழுத்து / இன எழுத்து


🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar