Saturday, February 22, 2020

55) சார்பெழுத்து


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


மொழியில்

எழுத்தின்
தனித்தன்மை
சார்புத்தன்மை

குறித்த
இரு
பாகுபாடுகள்


ஒன்று


மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற
எழுத்து

முதல் எழுத்து
(Primary Letter)


மற்றொன்று


முதல்
எழுத்துகளைச்
சார்ந்து
தோன்றுகின்ற
எழுத்து

சார்பு எழுத்து
(Secondary Letter)


இங்கு


தமிழ் மொழியில்

முதலெழுத்துகளைச்
சார்ந்து
தோன்றுகின்ற
சார்பு எழுத்துகள்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்



மெய்யும் உயிரும்
கூடிப் பிறக்கும்

1)   உயிர்மெய்


உயிரையும் மெய்யையும்
ஒருவகையொத்து
உயிருமாகாமல்
மெய்யுமாகாமல்
தனித்து நிற்கும்

2)  ஆய்தம்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடை

3)   உயிரளபெடை
4)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கம்

5)  குற்றியலிகரம்
6)  குற்றியலுகரம்
7)  ஐகாரக்குறுக்கம்
8)   ஔகாரக்குறுக்கம்
9)   மகரக்குறுக்கம்
10) ஆய்தக்குறுக்கம்


ஆகிய

பத்து எழுத்தும்
சார்பு எழுத்து ஆகும்.



நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் சார்பெழுத்து

Tamil Grammar Secondary Letter



No comments:

Post a Comment