Saturday, February 22, 2020

63) எழுத்தின் பிறப்பு - பொது விதி


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


காதால்
கேட்கப்படுவதும்
வாயால்
பேசப்படுவதும்

எழுத்தின்
ஒலி வடிவம்


கண்ணால்
காணப்படுவதும்
கையால்
எழுதப்படுவதும்

எழுத்தின்
வரி வடிவம்


எழுதப்படுவதனால்
எழுத்து என்று
அழைக்கப்படும்

அதன்
(எழுத்தின்)
பிறப்பு
குறித்து


இங்கு


சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்,


நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.




-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் எழுத்தின் பிறப்பு - பொது விதி

Tamil Grammar The Production Of Letter Sounds



No comments:

Post a Comment