உயிர் போலத்
தானே
இயங்கவல்ல
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ
என்னும்
அகரம் முதலாகிய
பன்னிரண்டு
எழுத்து
உயிரெழுத்து
(உயிர் எழுத்து)
அவற்றுள்
அ இ உ
என்னும்
மூன்று எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்
தனித்து
சுட்டுப் பொருள்
உணர்த்தி வந்தால்
சுட்டெழுத்து
என்று
பெயரிட்டு
அழைக்கப்பெறும்
இங்கு
அ என்னும் எழுத்து
(அகரம்)
பேசுவோனுக்கும்
கேட்போனுக்கும்
சேய்மையில் / தொலைவில்
உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்
சேய்மைச் சுட்டு
இ என்னும் எழுத்து
(இகரம்)
பேசுவோனுக்கு
அண்மையில் / அருகில்
உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்
அண்மைச் சுட்டு
உ என்னும் எழுத்து
(உகரம்)
கேட்போனுக்கு
அண்மையில் / அருகில்
உள்ள
ஒருவரையோ
ஒன்றனையோ
சுட்டுவதால்
அதாவது
சேய்மைக்கும்
அண்மைக்கும்
இடையில்
உள்ளதைச்
சுட்டுவதால்
இடைமைச் சுட்டு
இதுவே
பொதுவான
மரபு
இதன்
அடிப்படையில்
ஒரு சொல்லின்
அகத்தே நின்று
சுட்டுப்பொருளை
உணர்த்துவது
அகச்சுட்டு
(உ-ம்)
அவன்/அவள்/அவர்கள்/அது/அவை
இவன்/இவள்/இவர்கள்/இது/இவை
உவன்/உவள்/உவர்கள்/உது/உவை
ஒரு சொல்லின்
புறத்தே நின்று
சுட்டுப்பொருளை
உணர்த்துவது
புறச்சுட்டு
(உ-ம்)
அம்மனிதன் (அ + மனிதன்)
இம்மனிதன் (இ + மனிதன்)
உம்மனிதன் (உ + மனிதன்)
நன்னூல்
சூத்திரம்-66
அஇ
உம்முதற் றனிவரிற் சுட்டே
அஇ
உம்முதல் தனிவரின் சுட்டே
அ இ
உ என்னும் மூன்றும்
சொல்லுக்கு
முதலில் (அகத்தும் புறத்தும்)
தனித்து
சுட்டுப் பொருளில் வந்தால்
சுட்டெழுத்து
/ சுட்டு எழுத்து
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – சுட்டெழுத்து
Tamil Grammar – Demonstrative Letter
No comments:
Post a Comment