Saturday, February 22, 2020

52) எழுத்திலக்கணத்தின் பகுதி


ஒரு
மொழிக்கு

அடிப்படையாக
அமைந்த

ஒலிகளைக்
குறிக்கவும்

அந்த
ஒலிகளுக்கு
உண்டான

வரி
வடிவத்தைக்
குறிக்கவும்

பயன்படுவது

எழுத்து
(Letter)


எழுத்துகளின்
பண்பையும்
பயன்பாட்டையும்
விளக்குவது

எழுத்து இலக்கணம்


தமிழ்
மொழியில்


எழுத்திலக்கணத்தின்
பகுதிகள்
பன்னிரண்டு


அவைகள்
முறையே


ஒன்று

எழுத்துகளின்
எண்ணிக்கை

(எண்)


இரண்டு

எழுத்துகளின்
பெயர்

(பெயர்)


மூன்று

எழுத்துகள்
நிற்கும் முறை

(முறை)


நான்கு

எழுத்துகளின்
பிறப்பு

(பிறப்பு)


ஐந்து

எழுத்துகளின்
வடிவம்

(உருவம்)


ஆறு

எழுத்துகள்
ஒலிக்கும்
கால அளவு

(மாத்திரை)


ஏழு

சொல்லுக்கு
முதலாய் வரும்
எழுத்துகள்

(முதல்நிலை)


எட்டு

சொல்லுக்கு
ஈறாய் வரும்
எழுத்துகள்

(ஈறுநிலை)


ஒன்பது

சொல்லுக்கு
இடையாய் வரும்
எழுத்துகள்

(இடைநிலை)


பத்து

போலி
எழுத்துகள்

(போலி)


என்னும்
பத்து பகுதிகளைக்
கொண்டது

எழுத்தின்
அகத்திலக்கணம்


பதினொன்று

எழுத்தாலாகிய
சொல்

(பதம்)


பன்னிரண்டு

சொற்கள்
ஒன்றோடு ஒன்று
புணரும்
புணர்ச்சி

(புணர்பு)


என்னும்
இரு பகுதிகளைக்
கொண்டது

எழுத்தின்
புறத்திலக்கணம்


இதனை
(எழுத்திலக்கணத்தின்
பகுதிகளை)


பவணந்தி முனிவர்
இயற்றிய
நன்னூல்


எழுத்ததிகாரம்
(Orthography)

என்ற
பெரும்
பிரிவின்கீழ்


எழுத்தின்
அகத்திலக்கணப்
பகுதிகள்
பத்தையும்

எழுத்தியல்
என
ஓரியலாகவும்


எழுத்தின்
புறத்திலக்கணப்
பகுதிகளில்
ஒன்றான

எழுத்தாலாகும்
பதம்
குறித்து

பதவியல்
என
ஓரியலாகவும்


எழுத்தின்
புறத்திலக்கணப்
பகுதிகளில்
மற்றொன்றான

பதம் புணரும்
புணர்பு
குறித்து

உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்
என
மூவியலாகவும்


அதாவது


எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப் புணரியல்
உருபு புணரியல்

என

ஐந்து
சிறு பிரிவுகள்
கொண்டு

எளிமையாகவும்
தெளிவாகவும்
விளக்குகின்றது



நன்னூல்
சூத்திரம்-57


எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே

எண்பெயர் முறைபிறப் புஉருவம் மாத்திரை
முதல்ஈ றுஇடைநிலை போலி என்றா
பதம்புணர் புஎனப்பன் னிருபாற் றுஅதுவே

(எழுத்துகளின்) எண்ணிக்கை, பெயர்,
(எழுத்துகள்) நிற்கும் முறை, பிறப்பு,
வடிவம், ஒலிக்கும் கால அளவு,
(சொல்லுக்கு) முதல் நிலை, ஈறு நிலை,
இடை நிலை (ஆய் வரும் எழுத்துகள்),
போலி (எழுத்துகள்) (ஆகிய எழுத்தின்
அகத்திலக்கணம் பத்துடனே); (எழுத்தாலாகிய)
பதம், (பதங்கள் ஒன்றோடு ஒன்று புணரும்)
புணர்ச்சி (ஆகிய எழுத்தின் புறத்திலக்கணம்
இரண்டையும் கூட்ட) பன்னிரண்டு
பகுதிகளை உடையதாம் எழுத்திலக்கணம்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணத்தின் பகுதி

Tamil Grammar Division Of Orthography



No comments:

Post a Comment