Saturday, February 22, 2020

61) இனவெழுத்து


எழுத்தின்

பிறப்பு, முயற்சி
அளவு, பொருள்
வடிவு
ஆகிய இவற்றுள்

ஒன்று முதலாக
ஒரு வகையில்
சார்ந்தும் ஒத்தும்
அமைவது

இனவெழுத்து


இனமில்லாத
ஐகார (ஐ)
ஔகாரங்கள் (ஔ)

ஈகார (ஈ)
ஊகாரங்களுக்கு (ஊ)
இனமாகிய
இகர (இ)
உகரங்களை (உ)

தமக்கு
இனமாகப்
பொருந்த

உயிர் எழுத்து
பன்னிரண்டும்
மெய் எழுத்து
பதினெட்டும்
ஆகிய
முப்பது
முதலெழுத்துகள்

இரண்டிரண்டு
ஓரினமாகி
வருவது

தொன்றுதொட்டு
வழங்கி வரும்
முறைமை


அவ்வகையில்


அ - ஆ
இ - ஈ
உ - ஊ
எ - ஏ
இ - ஐ
ஒ - ஓ
உ - ஔ


க் - ங்
ச் - ஞ்
ட் - ண்
த் - ந்
ப் ம்

ய் - ர்
ல் வ்
ழ் ள்

ற் - ன்

என
இனமாய் வரும்


அதாவது


இடத்தாலும்
முயற்சியாலும்

உயிரெழுத்துகளுள்

குறிலுக்கு
(அ, இ, உ, எ, இ, ஒ, உ)
நெடிலும்
(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)


முயற்சியாலும்
மாத்திரையாலும்

மெய்யெழுத்துகளுள்

வல்லினத்திற்கு
(க், ச், ட், த், ப், ற்)
மெல்லினமும்
(ங், ஞ், ண், ந், ம், ன்)

இனமாய் வரும்


இடத்தாலும்
மாத்திரையாலும்

இடையினம்
(ய், ர், ல், வ், ழ், ள்)
ஆறும்
ஓரினமாம்


வடிவால்

ஐ - இ

ஒழிந்த
மற்ற உயிர்கள்

ஒ - ஓ

இனமாய் வரும்


பொருளால்


அது, ஆது
இங்கு, ஈங்கு
உங்கு, ஊங்கு
எது, ஏது
ஒடு, ஓடு
குளக்கரை, குளங்கரை
மட்குடம், மண்குடம்
வேயல், வேரல்

போல்வன
இனமாய் வரும்




நன்னூல்
சூத்திரம்-71


ஐஔ இஉச் செறிய முதலெழுத்
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே

ஐஔ இஉச் செறிய முதலெழுத்
துஇவ்விரண் டுஓர்இன ம்ஆய்வரல் முறையே

(இனமில்லாத) ஐகார ஔகாரங்கள்
(ஈகார ஊகாரங்களுக்கு இனமாகிய)
இகர உகரங்களை (தமக்கு இனமாகப்)
பொருந்த முதலெழுத்துகள் இரண்டு இரண்டு
ஓரினமாகி வருதல் முறை



நன்னூல்
சூத்திரம்-72


தான முயற்சி யளவு பொருள்வடி
வானவொன் றாதியோர் புடையொப் பினமே

தானம் முயற்சி அளவு பொருள்வடி
வுஆனஒன் றுஆதிஓர் புடைஒப் புஇனமே

எழுத்தின் பிறப்பு, முயற்சி, அளவு, பொருள்,
வடிவு ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக
ஒரு வகையில் சார்ந்தும் ஒத்தும் அமைவது
இனவெழுத்து / இன எழுத்து



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் இனவெழுத்து

Tamil Grammar Relative Letter



No comments:

Post a Comment