Saturday, February 22, 2020

53) எழுத்தின் வரையறையும் வகையும்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


எழுதப்படுவதனால்
எழுத்து என்று
அழைக்கப்படும்

அது
(எழுத்து)


ஒரு
மொழிக்கு

அடிப்படையாக
அமைந்த

ஒலிகளைக்
குறிக்கவும்

அந்த
ஒலிகளுக்கு
உண்டான

வரி
வடிவத்தைக்
குறிக்கவும்

பயன்படுவது


காதால்
கேட்கப்படுவதும்
வாயால்
பேசப்படுவதும்

ஒலி வடிவம்


அந்த

ஒலிவடிவத்தின்
அடிப்படையில்
அமைவது

கேட்டல் - Listening
பேசுதல் - Speaking


கண்ணால்
காணப்படுவதும்
கையால்
எழுதப்படுவதும்

வரி வடிவம்


அந்த

வரிவடிவத்தின்
அடிப்படையில்
அமைவது

படித்தல் - Reading
எழுதுதல் - Writing



முதல் எழுத்து
(Primary Letter)

சார்பு எழுத்து
(Secondary Letter)

என்பன

மொழியில்

எழுத்தின்
தனித்தன்மை
சார்புத்தன்மை

குறித்த
இரு
பாகுபாடுகள்


விளங்கக்கூறின்


மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற
எழுத்து

முதல் எழுத்து
(முதலெழுத்து)



முதல்
எழுத்துகளைச்
சார்ந்து
தோன்றுகின்ற
எழுத்து

சார்பு எழுத்து
(சார்பெழுத்து)



நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் எழுத்தின் வரையறையும் வகையும்

Tamil Grammar Definition And Distribution Of Letter



No comments:

Post a Comment