மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
மொழியில்
எழுத்தின்
தனித்தன்மை
சார்புத்தன்மை
குறித்த
இரு
பாகுபாடுகள்
ஒன்று
மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற
எழுத்து
முதல் எழுத்து
(Primary Letter)
மற்றொன்று
முதல்
எழுத்துகளைச்
சார்ந்து
தோன்றுகின்ற
எழுத்து
சார்பு எழுத்து
(Secondary Letter)
இவற்றில்
முதல் எழுத்து
என்பது
உயிர் எழுத்து
பன்னிரண்டும்
மெய் எழுத்து
பதினெட்டும்
ஆகிய
முப்பது எழுத்து
இங்கு
உயிரெழுத்து
மெய்யெழுத்து
என்பன
அவற்றின்
இயங்கு தன்மை
குறித்த
இரு பாகுபாடு
அதாவது
உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
உயிர் எழுத்து
(Vowel)
உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
மெய் எழுத்து
(Consonant)
காதால்
கேட்கப்படுவதும்
வாயால்
பேசப்படுவதும்
எழுத்தின்
ஒலி வடிவம்
கண்ணால்
காணப்படுவதும்
கையால்
எழுதப்படுவதும்
எழுத்தின்
வரி வடிவம்
தமிழ் மொழியில்
உயிர் ஒலியைக்
குறிக்கும்
வரிவடிவம்
பன்னிரண்டு (12)
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ
மெய் ஒலியைக்
குறிக்கும்
வரிவடிவம்
பதினெட்டு (18)
க் ங் ச் ஞ் ட் ண்
த் ந் ப் ம் ய் ர்
ல் வ் ழ் ள் ற் ன்
நன்னூல்
சூத்திரம்-59
உயிரு
முடம்புமா முப்பது முதலே
உயிரு ம்உடம்பும்ஆம்
முப்பது முதலே
உயிர்
எழுத்து (பன்னிரண்டும்)
மெய்
எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது
எழுத்து முதலெழுத்தாம்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – முதலெழுத்து – உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
Tamil Grammar – Primary Letter – Vowel and Consonant
No comments:
Post a Comment