மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து;
அது
முதல் எழுத்து
சார்பு எழுத்து
என
இரு வகையாம்
உயிர் எழுத்து
மெய் எழுத்து
ஆகிய இரண்டும்
முதலெழுத்து
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும்
சார்பெழுத்து
இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
ஆகிய
இவ்விரண்டும்
பல
பொருளுக்குப்
பொதுப் பெயர்
ஆகியும்
ஒவ்வொரு
பொருளுக்கே
சிறப்புப் பெயர்
ஆகியும்
வருவனவாம்
அவ்வகையில்
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ
என்னும்
அகரம் முதலாகிய
பன்னிரண்டும்
உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
என்பதால்
உயிரெழுத்து
என்றும்
க் ங் ச் ஞ் ட் ண்
த் ந் ப் ம் ய் ர்
ல் வ் ழ் ள் ற் ன்
என்னும்
ககரம் முதலாகிய
பதினெட்டும்
உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
என்பதால்
மெய்யெழுத்து
என்றும்
சொல்லுவர்
அறிவுடையோர்
அவற்றுள்
அ இ உ எ ஒ
என்னும்
ஐந்து எழுத்துகள்
குறுகி ஒலித்தலால்
குறிலெழுத்து / குற்றெழுத்து
என்றும்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
என்னும்
ஏழு எழுத்துகள்
நீண்டு ஒலித்தலால்
நெடிலெழுத்து / நெட்டெழுத்து
என்றும்
அ இ உ
என்னும்
மூன்று எழுத்துகள்
சொல்லுக்கு முதலில்
அகத்தும் புறத்தும்
தனித்து
சுட்டுப் பொருள்
உணர்த்தி வந்தால்
சுட்டெழுத்து
என்றும்
எ யா
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லின் முதலில்
அகத்தும் புறத்தும்
ஆ ஓ
என்னும்
இரண்டு எழுத்துகள்
சொல்லின் ஈற்றிலும்
ஏ
என்னும் எழுத்து
சொல்லின்
முதலிலும் ஈற்றிலும்
தனித்து நின்று
வினாப் பொருள்
உணர்த்தி வந்தால்
வினாவெழுத்து
என்றும்
க் ச் ட் த் ப் ற்
என்னும்
ஆறு எழுத்துகள்
வன்மையாய்
ஒலித்தலால்
வல்லினம் / வல்லெழுத்து
/
வன்கணம்
என்றும்
ங் ஞ் ண் ந் ம் ன்
என்னும்
ஆறு எழுத்துகள்
மென்மையாய்
ஒலித்தலால்
மெல்லினம் / மெல்லெழுத்து
/ மென்கணம்
என்றும்
ய் ர் ல் வ் ழ் ள்
என்னும்
ஆறு எழுத்துகள்
வன்மைக்கும்
மென்மைக்கும்
இடைப்பட்டு
ஒலித்தலால்
இடையினம் / இடையெழுத்து
/ இடைக்கணம்
என்றும்
எழுத்தின்
பிறப்பு, முயற்சி
அளவு, பொருள்
வடிவு
ஆகிய இவற்றுள்
ஒன்று முதலாக
ஒரு வகையில்
சார்ந்தும் ஒத்தும்
அமைவது
இனவெழுத்து
என்றும்
பெயரிட்டு
அழைக்கப்பெறும்.
நன்னூல்
சூத்திரம்-63
அம்முத
லீரா றாவி கம்முதன்
மெய்ம்மூ
வாறென விளம்பினர் புலவர்
அம்முத
ல்ஈர்ஆ றுஆவி கம்முதல்
மெய்ம்மூ
ஆறுஎன விளம்பினர் புலவர்
அகரம்
முதலாகிய பன்னிரண்டு
உயிர்
என்றும் ககரம் முதலாகிய
மெய்
பதினெட்டு என்றும்
சொல்லுவர்
அறிவுடையோர்.
நன்னூல்
சூத்திரம்-64
அவற்றுள்,
அஇ
உஎ ஒக்குறி லைந்தே
அவற்றுள்,
அஇ உஎ
ஒக்குறி ல்ஐந்தே
அவற்றுள்,
அ இ
உ எ ஒ என்னும் ஐந்தும்
குறில்
எழுத்து / குற்றெழுத்து
நன்னூல்
சூத்திரம்-65
ஆஈ
ஊஏ ஐஓ ஔநெடில்
ஆஈ ஊஏ
ஐஓ ஔநெடில்
ஆ ஈ
ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழும்
நெடில்
எழுத்து / நெட்டெழுத்து
நன்னூல்
சூத்திரம்-66
அஇ
உம்முதற் றனிவரிற் சுட்டே
அஇ
உம்முதல் தனிவரின் சுட்டே
அ இ
உ என்னும் மூன்றும்
சொல்லுக்கு
முதலில் (அகத்தும்
புறத்தும்)
தனித்து சுட்டுப் பொருளில்
வந்தால்
சுட்டெழுத்து / சுட்டு எழுத்து
நன்னூல்
சூத்திரம்-67
எயா
முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு
வழியும் வினாவா கும்மே
எயா
முதலும் ஆஓ ஈற்றும்
ஏஇரு
வழியும் வினாஆ கும்மே
எ யா
எனும் எழுத்துகள்
சொல்லின்
முதலிலும்
ஆ ஓ
எனும் எழுத்துகள்
சொல்லின்
ஈற்றிலும்
ஏ எனும்
எழுத்து
சொல்லின்
முதலிலும் ஈற்றிலும்
வினாப்
பொருளில் வந்தால்
வினாவெழுத்து
/ வினா எழுத்து
நன்னூல்
சூத்திரம்-68
வல்லினங்
கசட தபறவென வாறே
வல்லினம்
கசட தபறஎன ஆறே
வல்லினம்
என்பது
க் ச்
ட் த் ப் ற் என்னும் ஆறு
நன்னூல்
சூத்திரம்-69
மெல்லினம்
ஙஞண நமனவென வாறே
மெல்லினம்
ஙஞண நமனஎன ஆறே
மெல்லினம்
என்பது
ங் ஞ்
ண் ந் ம் ன் என்னும் ஆறு
நன்னூல்
சூத்திரம்-70
இடையினம்
யரல வழளவென வாறே
இடையினம்
யரல வழளஎன ஆறே
இடையினம்
என்பது
ய் ர்
ல் வ் ழ் ள் என்னும் ஆறு
நன்னூல்
சூத்திரம்-72
தான
முயற்சி யளவு பொருள்வடி
வானவொன்
றாதியோர் புடையொப் பினமே
தானம்
முயற்சி அளவு பொருள்வடி
வுஆனஒன்
றுஆதிஓர் புடைஒப் புஇனமே
எழுத்தின் பிறப்பு, முயற்சி, அளவு, பொருள்,
வடிவு ஆகிய இவற்றுள் ஒன்று முதலாக
ஒரு
வகையில் சார்ந்தும் ஒத்தும் அமைவது
இனவெழுத்து
/ இன எழுத்து
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – எழுத்தின் பெயர்
Tamil Grammar – The Name Of The Letter
No comments:
Post a Comment