Saturday, February 22, 2020

62) எழுத்தின் முறை

சிறப்பினாலும்
இனத்தினாலும்

ஒன்றன்பின்
ஒன்றாக
பொருந்தி

இவ்வுலகில்

அகரம்
முதலாக
தொன்றுதொட்டு
வழங்குதலே

எழுத்தின்
முறையாம்


விளங்கக்கூறின்


உயிர் போலத்
தானே
இயங்கவல்லது
உயிரெழுத்தின்
சிறப்பு

உயிரின்
உதவியின்றி
இயங்கமுடியாதது
மெய்யெழுத்தின்
சிறப்பின்மை

சிறப்பும்
சிறப்பின்மையும்
கருதி

உயிர் எழுத்து
முன்னும்
மெய் எழுத்து
பின்னும்
வைக்கப்பட்டன


அவ்வாறே


குறிலெழுத்தின்
விகாரமே
நெடிலெழுத்து
என்பதால்

குற்றெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
நெட்டெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


இதனைப்
போன்றே


வலியாரை
முன்வைத்து
மெலியாரை
பின்வைத்தல்
மரபு
என்பதால்

வல்லெழுத்து
முன்னும்
அவ்வவற்றிற்கு
இனமொத்த
மெல்லெழுத்து
அவ்வவற்றிற்கு
பின்னும்
வைக்கப்பட்டன


வல்லெழுத்து
மெல்லெழுத்து
உணர்ந்தாலன்றி
இடையெழுத்து
உணரலாகாது
என்பதால்

அச்சிறப்பின்மை
கருதி
ஓரினமான
இடையெழுத்து
ஆறும்

அவற்றின்
பின்
வைக்கப்பட்டன


மேலும்


ற் ன் என்பன
கலப்பொலிகளாக
அமைந்துள்ள
சிறப்பின்மையால்

இடையெழுத்து
இவ்விரு (ற், ன்)
எழுத்துகளுக்கு
முன்னர்
இடமளிக்கப்பட்டு
ற் ன் எழுத்துகள்
இறுதியில்
வைக்கப்பட்டன


என்பது


எழுத்தின்
முறையாம்



நன்னூல்
சூத்திரம்-73


சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்த றானே முறையா கும்மே

சிறப்பினும் இனத்தினும் செறிந்துஈண் டுஅம்முதல்
நடத்த ல்தானே முறைஆ கும்மே

சிறப்பினாலும் இனத்தாலும் பொருந்தி
இங்கு அகரம் முதலாக வழங்குதல்தான்
எழுத்தினது முறை ஆகும்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் எழுத்தின் முறை

Tamil Grammar The Way How The Alphabet Is Arranged



No comments:

Post a Comment