Saturday, February 22, 2020

57) இடுகுறிப்பெயர் காரணப்பெயர்


ஒருவரிடமிருந்து
மற்றொருவரை

அல்லது

ஒன்றிலிருந்து
மற்றொன்றை

வேறுபடுத்தி

தெரிந்துகொள்ளவும்
சுட்டிக்காட்டவும்
பயன்படுத்தப்படும்
அடையாளச் சொல்

பெயர்
(Name)


அது


காரணம்
ஏதுமின்றி
ஒருவருக்கோ
ஒன்றனுக்கோ
இடப்பட்ட
பெயர் என்றால்

இடுகுறிப்பெயர்
(Arbitrary Name)


என்றும்


ஏதேனுமொரு
காரணம் கருதி
ஒருவருக்கோ
ஒன்றனுக்கோ
இடப்பட்ட
பெயர் என்றால்

காரணப்பெயர்
(Appellative Name)

என்றும்
அழைக்கப்பெறும்


மேலும்


இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
ஆகிய
இவ்விரண்டும்


பல பொருளுக்குப்
பொதுப் பெயர்
(Common Name)-ஆகி


இடுகுறிப் பொதுப்பெயர்

(எ-டு)

மரம்


காரணப் பொதுப்பெயர்

(எ-டு)

அணி
(அணியப்படுதலால்)


என்றும்


ஒவ்வொரு பொருளுக்கே
சிறப்புப் பெயர்
(Proper Name)-ஆகி


இடுகுறிச் சிறப்புப்பெயர்

(எ-டு)

பனை


காரணச் சிறப்புப்பெயர்

(எ-டு)

முடி
(முடியின்மேல் வைக்கப்படுதலால்)


என்றும்
வழங்கப்பெறும்



நன்னூல்
சூத்திரம்-62


இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின

இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின

இடுகுறிப்பெயரும் காரணப்பெயரும் ஆகிய
இவ்விரண்டும் பல பொருளுக்குப் பொது
பெயராகியும் ஒவ்வொரு பொருளுக்கே
சிறப்புப் பெயராகியும் வருவனவாம்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர் காரணப்பெயர்

Tamil Grammar Arbitrary And Appellative Names



No comments:

Post a Comment