நன்னூல் - எழுத்ததிகாரம் - கடவுள் வணக்கம்
Nannool/Nannul – Orthography - Praise Of God/Invocation
தெய்வ வணக்கமும்
செயப்படு பொருளும்
(நூல்
நுவலும் பொருள்)
எய்த
உரைப்பது
தற்சிறப்புப்பாயிரம்
வழிபடும்
தெய்வத்திற்கு
வணக்கம்
செய்து
மங்கலச்
சொல்லை
முதலாக
வகுத்து
செய்தற்கு
எடுத்த
இலக்கணம்
இலக்கியம்
இடுக்கண்
இன்றி
இனிது முடியும்
என்னும்
திடமான
நம்பிக்கையுடன்
பூக்கள்
நிறைந்த
அசோக
மரத்தினது
அலங்கரிக்கும்
நிழலின்கண்
அமர்ந்திருக்கும்
நான்முகனைத்
தொழுது
வணங்கி
தமிழ்
மொழிக்கு
அடிப்படையாக
அமைந்த
ஒலிகளைக்
குறிக்கவும்
அந்த
ஒலிகளுக்கு
உண்டான
வரி
வடிவத்தைக்
குறிக்கவும்
பயன்படுகின்ற
எழுத்தின்
அகத்திலக்கணம்
புறத்திலக்கணம்
என்னும்
இரு
வகைகளை
எழுத்ததிகாரம்
(Orthography)
என்ற
பெரும்
பிரிவின் கீழ்
எழுத்தியல்
பதவியல்
உயிரீற்றுப் புணரியல்
மெய்யீற்றுப்
புணரியல்
உருபு புணரியல்
என்ற
ஐந்து
சிறு பிரிவுகள்
கொண்டு
202
சூத்திரங்கள்
மூலம்
யாவரும்
அறிய
நன்றாக
நவில்வேன்
நன்னூல்
சூத்திரம்-56
பூமலி
யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற்
றொழுதுநன் கியம்புவ னெழுத்தே
பூமலி
அசோகின் புனைநிழ ல்அமர்ந்த
நான்முகன்
தொழுதுநன் குஇயம்புவ ன்எழுத்தே
பூக்கள்
நிறைந்த அசோக மரத்தினது
அலங்கரிக்கும்
நிழலின்கண் அமர்ந்திருக்கும்
நான்முகனைத்
தொழுது வணங்கி நன்றாக
சொல்வேன்
எழுத்து இலக்கணம்
No comments:
Post a Comment