Monday, January 27, 2020

43) வழிபாடு


காலத்தோடு
சென்றும்

வழிபாடு
செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாகவும்

நற்குணத்தோடு
பழகியும்

ஆசிரியர்
குறிப்பினை
உணர்ந்து

அவர்
(ஆசிரியர்)

இரு
என்றால்
இருந்தும்

சொல்
என்றால்
சொல்லியும்

பசித்து
உண்பவனுக்கு
உணவின்மேல்
உள்ள
ஆசை போல்

பாடம்
கேட்டலில்
ஆர்வம்
உடையவனாகவும்

சித்திரப்பாவை
போன்று
அசைவறு
குணங்கொண்டு
அடங்கியும்

காதானது
வாயாகவும்

மனமானது
கொள்ளும்
இடமாகவும்

கேட்டவற்றை
விளங்கும்படி
கேட்டு
அவற்றை
மறந்துவிடாது
உள்ளத்தில்
நிறைத்தும்

போ
என்றால்
போகுதலும்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகள்


என்று


சொல்லுவர்
அறிவுடையோர்.


இங்கு

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகளில்

ஒன்றான

வழிபாடு
செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாகவும்

என்பதில்
குறிப்பிடப்படும்

வழிபாடு

என்பதன்
விளக்கத்தைச்

சற்று
விரிவாக
அறிவோம்



நெருப்பை விட்டு
விலகாமலும்
அதனை
நெருங்காமலும்

குளிர் காய்பவன்
போன்று
ஆசிரியர்க்கு
அஞ்சியும்

ஆசிரியரை
நிழல் போல்
நீங்காமலும்

நிறைந்த
மனதுடனும்

எத்தன்மையால்
ஆசிரியர்
மகிழ்வாரோ
அத்தன்மையில்

அறத்தினின்று
மாறுபடாமல்
நடப்பதும்

மாணாக்கர்
ஆசிரியர்க்குச்
செய்யும்


வழிபாடு


அத்தகைய
வழிபாடு செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாக
இருக்க
வேண்டுமென்பதே

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகளில்
ஒன்று



நன்னூல்
சூத்திரம்-46


அழலி னீங்கா னணுகா னஞ்சி
நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ
டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே

அழலின் நீங்கா ன்அணுகா ன்அஞ்சி
நிழலி ன்நீங்கா நிறைந்த நெஞ்சம்ஓடு
எத்திறத் துஆசா ன்உவக்கு ம்அத்திறம்
அறத்தின் திரியாப் படர்ச்சிவழி பாடுஏ

நெருப்பை விட்டு விலகாமலும் அதனை
நெருங்காமலும் (குளிர் காய்பவன் போன்று) 
அஞ்சியும் (ஆசிரியரை) நிழல் போல்
நீங்காமலும் நிறைந்த மனதுடனும்;
எத்தன்மையால் ஆசிரியர் மகிழ்வாரோ
அத்தன்மையில் அறத்தினின்று மாறுபடாமல்
நடப்பதும் (மாணாக்கர் ஆசிரியர்க்குச்
செய்யும்) வழிபாடு ஆகும்




-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் வழிபாடு

Tamil Grammar The Respect Due To A Teacher




No comments:

Post a Comment