Monday, January 27, 2020

44) சிறப்புப்பாயிரத்தின் இயல்பு


சிறப்புப்பாயிரத்தின் இயல்பு

What A Special Preface Should Contain

ஒரு நூலுக்கு
இன்றியமையாதது
எனக்
கருதப்படுவது

பாயிரம்

(ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி)


அது
(பாயிரம்)

ஒரு நூலில்

சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்

என
இருவகைகளில்
அமையும்


சிறப்புப்பாயிரம்
என்பது

அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது


பொதுப்பாயிரம்
என்பது

பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது


இங்கு


ஒரு நூலில்
இடம்பெறும்
சிறப்புப்பாயிரம்

தன்னிடத்தில்
கொண்டிருக்க
வேண்டிய

அந்நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள்

எவையென


சிறப்புப்பாயிரத்தின்
இயல்பு


என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்



ஒன்று

நூல் ஆசிரியரின்
பெயர்


இரண்டு

நூல் வந்த
வழி


மூன்று

நூல் வழங்கும்
நில எல்லை


நான்கு

நூலிற்குச் சூட்டப்பட்ட
தலைப்பு


ஐந்து

நூல் ஆக்கப்பட்ட
முறை


ஆறு

நூலில் சொல்லப்பட்ட
பொருள்


ஏழு

நூல் பொருள்
கேட்போர்


எட்டு

நூலால் விளையும்
பயன்


ஆகிய
எட்டு விவரங்களை
விளங்கக் கூறுவது

சிறப்புப்பாயிரத்தின்
இயல்பு


இவற்றுடன்


ஒன்பது

நூல் தோன்றிய
காலம்


பத்து

நூல் அரங்கேறிய
சபை


பதினொன்று

நூல் இயற்றியதன்
காரணம்


என்னும்
இந்த மூன்றையும்
சேர்த்துப்

பதினொன்று
என்று
கூறுபவர்களும்
உண்டு



நன்னூல்
சூத்திரம்-47

ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயன்ஓ டுஆயஎண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் துஇயல்பே

(நூல்) ஆசிரியர் பெயர்; (நூல் வந்த) வழி;
(நூல் வழங்கும் நில) எல்லை; (நூலிற்குச்
சூட்டப்பட்ட) தலைப்பு; (நூல் ஆக்கப்பட்ட)
முறை; (நூலில்) சொல்லப்பட்ட பொருள்;
(நூல் பொருள்) கேட்போர்; (நூலால் 
விளையும்) பயன் ஆகிய எட்டு
விவரங்களை விளங்கக் கூறுவது
(சிறப்புப்) பாயிரத்தின் இயல்பாகும்.


நன்னூல்
சூத்திரம்-48

காலங் கலனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே

காலம் கலனே காரண ம்என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிநரு ம்உளரே

(நூல் தோன்றிய) காலம்; (நூல் அரங்கேறிய) 
சபை; (நூல் இயற்றியதன்) காரணம் 
என்னும் இந்த மூன்றையும்
சேர்த்து(ப் பதினொன்று என்று)
கூறுபவர்களும் உண்டு.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment