Monday, January 27, 2020

37) தலை மாணாக்கர்


ஆசிரியரால்
கற்பிக்கப்படும்
நூற்பொருளை

மாணாக்கர்
கற்கும் தன்மையின்
அடிப்படையில்
அறியப்படுவது

மூவகை
மாணாக்கர்


அவர்கள்
முறையே


அன்னம்
பசு
போன்றவர்
தலை மாணாக்கர்

மண்
கிளி
போன்றவர்
இடை மாணாக்கர்

ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர்


இங்கு

அம்மூவகை
மாணாக்கரில்

அன்னம்
பசு
போன்று
கருதப்படுகின்ற

தலை மாணாக்கர்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


பாலையும் நீரையும்
வேறுபிரித்து
பாலை மட்டும்
பருகுவது

அன்னம்


கிடைத்த இடத்தில்
வயிறு நிரம்ப
புல்லை
மேய்ந்துவிட்டு

பின்பு

ஓரிடத்து இருந்து
அதனை
வாயில் வருவித்து
மென்று தின்பது

பசு


அவற்றைப்
போன்று
(அன்னம், பசு
போன்று)


ஆசிரியர்
கற்பிப்பதில்

நல்லதையும் அல்லதையும்
வேறுபிரித்து
நல்லதை மட்டும்
கொள்ளும்
மாணாக்கர்

குணத்தையும் குற்றத்தையும்
வேறுபிரித்து
குணத்தை மட்டும்
கொள்ளும்
மாணாக்கர்

ஆசிரியர்
கற்பிக்கும்

எல்லாவற்றையும்
செவியில்
வாங்கிக் கொண்டு

பின்பு

அவற்றைச்
சிந்தனைக்குக்
கொண்டுவந்து
அலசி
ஆராய்ந்திடும்
மாணாக்கர்


தலை மாணாக்கர்



நன்னூல்
சூத்திரம்-38


அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்

அன்னம் ஆவே மண்ஒடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலைஇடை கடைமா ணாக்கர்

அன்னம் பசு போன்றவர் தலை மாணாக்கர்;
மண் கிளி போன்றவர் இடை மாணாக்கர்;
ஓட்டைக்குடம் ஆடு எருமை சல்லடை
போன்றவர் கடை மாணாக்கர் ஆவர்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் மூவகை மாணாக்கர் தலை மாணாக்கர்

Tamil Grammar Three Classes of Scholars or Students - Good




No comments:

Post a Comment