ஆசிரியரால்
கற்பிக்கப்படும்
நூற்பொருளை
மாணாக்கர்
கற்கும் தன்மையின்
அடிப்படையில்
அறியப்படுவது
மூவகை
மாணாக்கர்
அவர்கள்
முறையே
அன்னம்
பசு
போன்றவர்
தலை மாணாக்கர்
மண்
கிளி
போன்றவர்
இடை மாணாக்கர்
ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர்
இங்கு
அம்மூவகை
மாணாக்கரில்
ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்று
கருதப்படுகின்ற
கடை மாணாக்கர்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
நீர் நிரப்பநிரப்ப
பொத்தல்கள் வழியே
நீரை ஒழுகவிட்டு
வெறுங்குடமாவது
ஓட்டைக்குடம்
கிடைத்த இடத்தில்
வயிறு நிரம்ப
புல்லை மேயாமல்
பார்க்கும் இடங்களில்
எல்லாம்
நுனிப்புல் மேய்ந்து
வயிறு நிரம்பாமல்
அலையும்
இயல்புடையது
ஆடு
குளத்து நீரைக்
கலக்கி
சேறும் சகதியும்
ஆக்கிய பின்பு
அதைப் பருகும்
இயல்புடையது
எருமை
பனங்கள்ளை
வடிகட்டும்போது
தேவையான
மதுவை விடுத்து
தேவையற்றதைப்
பிடித்துக் கொள்வது
சல்லடை
(பனை மட்டையின்
பன்னாடை)
அவற்றைப்
போன்று
(ஓட்டைக்குடம், ஆடு
எருமை, சல்லடை)
ஆசிரியர்
கற்பித்தவற்றைக்
கேட்டவுடன்
மறந்துவிடும்
மாணாக்கர்
பல ஆசிரியரிடம்
சென்று
பாடம் கற்றும்
நிரம்பாத
அறிவோடு அலையும்
மாணாக்கர்
ஆசிரியரின்
மனதை
வருத்தி நோகடித்து
கல்வி கற்கும்
மாணக்கர்
ஆசிரியர்
கற்பித்தவற்றில்
தேவையானதை
விட்டுவிட்டுத்
தேவையற்றதைப்
பிடித்துக்கொள்ளும்
மாணாக்கர்
கடை மாணாக்கர்
நன்னூல்
சூத்திரம்-38
அன்ன
மாவே மண்ணொடு கிளியே
இல்லிக்
குடமா டெருமை நெய்யரி
அன்னர்
தலையிடை கடைமா ணாக்கர்
அன்னம் ஆவே மண்ஒடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை
நெய்யரி
அன்னர் தலைஇடை கடைமா ணாக்கர்
அன்னம்
பசு போன்றவர் தலை மாணாக்கர்;
மண்
கிளி போன்றவர் இடை மாணாக்கர்;
ஓட்டைக்குடம்
ஆடு எருமை சல்லடை
போன்றவர் கடை மாணாக்கர் ஆவர்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – மூவகை மாணாக்கர் - கடை மாணாக்கர்
No comments:
Post a Comment