Monday, January 27, 2020

42) நூல் பயில் இயல்பு


நூல் பயில் இயல்பு

Method of Study

காலத்தோடு
சென்றும்

வழிபாடு
செய்வதில்
வெறுப்பு
இல்லாதவனாகவும்

நற்குணத்தோடு
பழகியும்

ஆசிரியர்
குறிப்பினை
உணர்ந்து

அவர்
(ஆசிரியர்)

இரு
என்றால்
இருந்தும்

சொல்
என்றால்
சொல்லியும்

பசித்து
உண்பவனுக்கு
உணவின்மேல்
உள்ள
ஆசைபோல்

பாடம்
கேட்டலில்
ஆர்வம்
உடையவனாகவும்

சித்திரப்பாவை
போன்று
அசைவறு
குணங்கொண்டு
அடங்கியும்

காதானது
வாயாகவும்

மனமானது
கொள்ளும்
இடமாகவும்

கேட்டவற்றை
விளங்கும்படி
கேட்டு
அவற்றை
மறந்துவிடாது
உள்ளத்தில்
நிறைத்தும்

போ
என்றால்
போகுதலும்

மாணாக்கரின்

கற்கும்
இயல்புகள்

என்று

சொல்லுவர்
அறிவுடையோர்


மேலும்


இங்கு நாம்

மாணாக்கரின்

நூல் பயில்
இயல்புகளையும்

சற்று
விரிவாக
அறிவோம்


உலக வழக்கு
செய்யுள் வழக்கு
ஆகிய
இரு வழக்குகளை
அறிதல்

கற்கும்
பாடத்தை
அதன்
பயன்கருதி
போற்றல்

கேட்ட
நூற்பொருளைப்
பலமுறை
சிந்தித்தல்

ஆசிரியரைச்
சார்ந்து
நூற்பொருள்
தெளிவாக
விளங்கும்படி
கேட்டல்

கற்கும்
சிறப்புடைவரோடு
சேர்ந்து
பயிற்சி செய்தல்

ஐயுற்ற
பொருள்குறித்து
அறிந்துகொள்ள
வினா தொடுத்தல்

வினவபட்ட
வினாக்களுக்குத்
தக்க
விடை அளித்தல்

ஆகியவற்றை

மாணாக்கர்

பாடம்
பயிலும்போது

தமது
கடமையாய்க்
கொண்டால்

அவரை விட்டு

அறியாமை
அனைத்தும்
அகன்றுபோகும்


அதுமட்டுமல்ல


பாடத்தை
ஒரு முறை
கேட்பவன்
இரு முறை
கேட்பானெனில்

பெரும்பாலும்
நூல் பொருளில்
பிழைபடுதல்
இலனாவான்

மூன்று முறை
கேட்பானாயின்
முறைமை
உணர்ந்து
மற்றவர்க்குச்
சொல்லுவான்


ஆசிரியர்
கற்பித்த பொருளை
நிரம்பக்
கற்றவராயினும்

காற்பங்கல்லது
அதற்கதிகமாக
பெறாதவராவார்


மீதமுள்ள
முக்காற் பங்கு


கற்கும்
சிறப்புடைவரோடு
சேர்ந்து
பயிற்சி செய்யும்
வகையில்
காற்பங்கும்

கற்றவற்றைப்
பிறருக்கு
உரைத்தலால்
மற்றை
அரைப்பங்கும்

பெற

குற்றமற்ற
புலமையுடன்
பெருஞ்சிறப்பும்
உடையதாக்கும்



நன்னூல்
சூத்திரம்-41


நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்குஅறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்
அம்மாண்பு உடையோர் தம்ஒடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றுஇவை
கடன்ஆகக் கொளினே மடநனி இகக்கும்

நூல் பயில் இயல்பைச் சொல்வதென்றால்
(அது) வழக்குகளை அறிதல்: பாடத்தைப் 
போற்றுதல்: கேட்டவற்றைச் சிந்தித்தல்;
ஆசிரியரைச் சார்ந்து விளங்கக் கேட்டல்;
கற்பதில் சிறப்புடையோருடன் பயிற்சி
செய்தல்; வினா தொடுத்தல்; வினாவிற்கு
விடையளித்தல் ஆகியவற்றை கடமையாக
கொண்டால் அறியாமை அனைத்தும் அகலும்.



நன்னூல்
சூத்திரம்-42


ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே

ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலின் பிழைபா டுஇலனே

(பாடத்தை) ஒரு முறை கேட்பவன்
இரு முறை கேட்பானெனில் பெரும்பாலும்
நூல் பொருளில் பிழைபடுதல் இலன் ஆவான்



நன்னூல்
சூத்திரம்-43


முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்

முக்கால் கேட்பின் முறைஅறிந் துஉரைக்கும்

மூன்று முறை கேட்பானாயின் முறைமை
உணர்ந்து மற்றவர்க்குச் சொல்லுவான்



நன்னூல்
சூத்திரம்-44


ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்

ஆசா ன்உரைத்த துஅமைவரக் கொளினும்
காற்கூ றுஅல்லது பற்றல ன்ஆகும்

ஆசிரியர் கற்பித்த பொருளை நிரம்பக்
கற்றவராயினும் காற்பங்கல்லது
அதற்கதிகமாகப் பெறாதவர் ஆவார்



நன்னூல்
சூத்திரம்-45


அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்

அவ்வினை யாளர்ஒடு பயில்வகை ஒருகால்
செவ்விதி ன்உரைப்ப அவ்இரு காலும்
மைஅறு புலமை மாண்புஉடைத் துஆகும்

கற்கும் சிறப்புடைவரோடு சேர்ந்து
பயிற்சி செய்யும் வகையில் காற்பங்கும்
கற்றவற்றைப் பிறருக்கு உரைத்தலால்
மற்றை அரைப்பங்கும் பெற்று
குற்றமற்ற புலமையுடன் பெருஞ்சிறப்பும்
உடையதாக்கும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment