தனது மகன்
ஆசான் மகன்
அரசன் மகன்
(கல்வியின் மேன்மை
உணர்ந்து
அதனைக்
கற்றிட)
மிகுந்த பொருள்
கொடுப்போன்
தன்னைத்
(ஆசிரியரைத்)
தெய்வமெனக் கருதி
வழிபடுவோன்
நூற்பொருளை
விரைவில்
அறிந்து கொள்வோன்
ஆகிய
அறுவர்
ஆசிரியர்
தனது
மாணாக்கராக
ஏற்கத்
தகுந்தவர்கள்
அவர்களுக்கே
ஆசிரியரால்
கற்பிக்கப்பட
வேண்டியது
நூற்பொருள்.
மேலும்
ஆசிரியர்
தனது
மாணாக்கராக
ஏற்கத்
தகாதவர்கள்
யார் யார்
என்பதையும்
இங்கு நாம்
அறிந்து
கொள்வோம்
மயக்கத்தில்
மிதந்திடும்
குடிகாரன்
(களி)
சோம்பித்
திரிந்திடும்
சோம்பேறி
(மடி)
கர்வம்
மிகுந்த
கர்வி
(மானி)
காம இச்சையில்
களித்திடும்
காமுகன்
(காமி)
களவாடிப்
பிழைத்திடும்
திருடன்
(கள்வன்)
தீராத நோயால்
அவதிபடும்
நோயாளி
(பிணியன்)
ஆதரிப்பார்
யாருமற்ற
வறியவன்
(ஏழை)
மாறுபட்ட
சிந்தனையுடைய
பிடிவாதக்காரன்
(பிணக்கன்)
சினத்தால்
குணமிழக்கும்
கோபக்காரன்
(சினத்தன்)
உறங்கி
வழிந்திடும்
தூங்குமூஞ்சி
(துயில்வோன்)
மந்த புத்தி
கொண்ட
அறிவீனன்
(மந்தன்)
பழமையான
நூல்களைக் கற்க
அஞ்சி நடுங்குபவன்
(தொன்னூற்கஞ்சித்
தடுமாறுளத்தன்)
அஞ்ச வேண்டியதற்கு
அஞ்சாத
கொடியவன்
(தறுகணன்)
தீவினைகள்
செய்திடும்
தீயவன்
(பாவி)
பொய்ப்
பேசிடும்
பொய்யன்
(படிறன்)
ஆகியோர்க்கு
ஆசிரியர்
கற்பிப்பதில்லை
நூற்பொருள்
நன்னூல்
சூத்திரம்-39
களிமடி
மானி காமி கள்வன்
பிணிய
னேழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன்
மந்தன் றொன்னூற் கஞ்சித்
தடுமா
றுளத்தன் றறுகணன் பாவி
படிறனின்
னோர்க்குப் பகரார் நூலே.
களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்நூற்கு அஞ்சித்
தடுமா றுஉளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே.
குடிகாரன்,
சோம்பேறி, கர்வி, காமுகன்,
திருடன்,
நோயாளி, வறியவன், பிடிவாதக்
காரன்,
கோபக்காரன், தூங்குமூஞ்சி,
அறிவீனன்,
பழமையான நூல்களைக்
கற்க
அஞ்சி நடுங்குபவன், அஞ்ச
வேண்டியதற்கு
அஞ்சாதிருக்கும் கொடியவன்,
தீயவன்,
பொய்யன் ஆகியோர்க்கு
ஆசிரியர்
கற்பிப்பதில்லை நூற்பொருள்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – மாணவராக ஏற்கத் தகாதவர்கள்
No comments:
Post a Comment