Monday, January 27, 2020

46) நூல் செய்யும் விதம்


மனிதன்

தன்னுடைய
எண்ணம்
கருத்து
சிந்தனை
ஆகியவற்றை

எழுத்து உருவில்
காட்டும்
ஒரு கருவி

நூல்


அது

முதல் நூல்
வழி நூல்
புடை நூல்

என
மூவகையாம்


அதாவது


வினையினின்று
விலகி
தேர்ந்த
ஞானத்தை உடைய
ஆய்வாளன்
அறிந்து செய்வது

முதல் நூல்


முதல் நூலை
முழுவதும் ஒத்து
தேவையான
வேறுபாட்டுடன்
மரபு
கெடாது செய்வது

வழி நூல்


முதல் நூலுக்கும்
வழி நூலுக்கும்
சிறுபான்மை
ஒத்து
பெரும்பான்மை
வேறுபாட்டுடன்
செய்வது

புடை நூல்
(சார்பு நூல்)



இங்கு


அம்மூவகை
நூல்கள்
யாக்கும் விதம்
(ஆக்கும் விதம்)
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒன்று

விரிந்து
கிடப்பனவற்றைத்
தொகுத்துச்
சொல்லுதல்

(உதாரணம் நேமிநாதம்)


இரண்டு

சுருங்கிக்
கிடப்பனவற்றை
விரித்துச்
சொல்லுதல்

(உதாரணம் பெரியபுராணம்)


மூன்று

தொகுத்தும்
விரித்தும்
சொல்லுதல்

(உதாரணம் நன்னூல்)


நான்கு

ஒரு
மொழியில்
உள்ளதை
மற்றொரு
மொழியில்
சொல்லுதல்
(மொழிப்பெயர்ப்பு)

(உதாரணம் நைடதம்)


என்று
சொல்லத்தக்க
வகையில்

நூல்
செய்யும்
விதம்

நான்கு
என்று
சொல்வர்
அறிவுடையோர்



நன்னூல்
சூத்திரம்-50


தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிப்பெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப

தொகுத்தல் விரித்த ல்தொகைவிரி மொழிப்பெயர்ப்
புஎனத்தகு நூல்யாப் புஈர்இரண் டுஎன்ப

(விரிந்து கிடப்பனவற்றைத்) தொகுத்துச்
சொல்லுதல்; (சுருங்கிக் கிடப்பனவற்றை)
விரித்துச் சொல்லுதல்; தொகுத்தும்
விரித்தும் சொல்லுதல்; ஒரு மொழியில்
உள்ளதை மற்றொரு மொழியில்
சொல்லுதல் (மொழிப்பெயர்ப்பு) என்று
சொல்லத்தக்க வகையில் நூல் செய்யும்
விதம் நான்கு என்று சொல்வர்
(அறிவுடையோர்).



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நூல் செய்யும் விதம்

Tamil Grammar Four Ways In Which A Book May Be Composed





No comments:

Post a Comment