Monday, January 27, 2020

35) மாணவராக ஏற்கத் தகுந்தவர்கள்


மாணவராக ஏற்கத் தகுந்தவர்கள்

Persons Who Are To Be Taught

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்றுத்
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

தன்னுடைய
இயல்புகளாகக்
கொண்டவர்


நல்லாசிரியர்
(சிறந்த ஆசிரியர்)


காலத்தையும்
இடத்தையும்
தூயதாகத்
தேர்ந்தெடுத்தும்

மேன்மையான
இடத்திலிருந்தும்

தான் வழிபடும்
கடவுளைத்
துதித்து வணங்கியும்

தன்னால்
சொல்லப்படுவதாகிய
நூற்பொருளைத்
தனது மனத்துள்ளே
நிறைத்தும்

துரிதப்
படாதவனாகவும்

கோபப்
படாதவனாகவும்

கற்பிப்பதில்
விருப்பம் கொண்டும்

இன்முகத்துடனும்

மாணவன்
கொளத்தகும் அறிவு
இவ்வளவு
என அறிந்து
அவன் அறிவு
ஏற்கும்படியாகவும்

மாறுபாடு இல்லாத
மனத்துடனும்

நூல் பொருளைக்
கற்பிக்க வேண்டும்

என்பது

அறிவுடையோர்
குறிப்பிடும்

அவரின்
(ஆசிரியரின்)


கற்பிக்கும்
இயல்புகள்


இங்கு


அவர்
(ஆசிரியர்)

யார் யாரைத்
தன்னுடைய
மாணவராக ஏற்று

நூல் பொருளைக்
கற்பிக்க வேண்டும்

என்பது குறித்து
அறிந்துக் கொள்வோம்


ஒன்று

தனது மகன்

இரண்டு

ஆசான் மகன்

மூன்று

அரசன் மகன்

நான்கு

(கல்வியின் மேன்மை
உணர்ந்து
அதனைக் கற்றிட)
மிகுந்த பொருள்
கொடுப்போன்

ஐந்து

தன்னைத்
(ஆசிரியரைத்)
தெய்வமெனக் கருதி
வழிபடுவோன்

ஆறு

நூற்பொருளை
விரைவில்
அறிந்துக் கொள்வோன்

ஆகிய
அறுவர்

ஆசிரியர்
தனது
மாணாக்கராக
ஏற்கத்
தகுந்தவர்கள்


அவர்களுக்கே

ஆசிரியரால்
கற்பிக்கப்பட
வேண்டியது
நூற்பொருள்.



நன்னூல்
சூத்திரம்-37


தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே.

தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே.

தனது மகன், ஆசான் மகன், அரசன்
மகன், மிகுந்த பொருள் கொடுப்போன்,
(தன்னைத் தெய்வமெனக் கருதி)
வழிபடுவோன், நூற்பொருளை
விரைவில் அறிந்துக் கொள்வோன்
ஆகியோர்க்குக் கற்பிப்பது நூல் பொருளே.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment