Monday, January 27, 2020

45) நூல் பெயர்


நூல் பெயர்

How A Book Is To Be Named

முதல் நூல்


நூலைச்
செய்தவன்
(கருத்தன்)


நூலின்
அளவு


நூலில்
மிகுதியாய்ச்
சொல்லப்படும்
பொருள்


நூல்
முழுமையும்
சொல்லப்படும்
பொருள்


நூலைச்
செய்வித்தவன்


நூலின்
குணம்
(தன்மை)


முதலியவற்றில்


ஏதேனுமொரு
காரணம் கருதி

காரணப்
பெயராகவோ


அல்லது


காரணம்
ஏதுமின்றி

இடுகுறிப்
பெயராகவோ


ஒரு
நூலுக்கு

பெயர்
அமையும்


அவற்றிற்கான
சில
உதாரணங்கள்


காரணப்பெயர்கள்


முதல் நூலால்
பெயர் பெற்றது

இராமாயணம்
(முதல் நூலால்
பெயர் பெறுவது
வழி நூல்
சார்பு நூல்கட்கே
அமையும்)


நூல் செய்தவனால்
பெயர் பெற்றது

அகத்தியம்
(ஆசிரியர் - அகத்தியர்)


நூலின் அளவால்
பெயர் பெற்றது

நாலடி நானூறு
(நான்கு அடிகளில்
நானூறு பாடல்கள்)


நூலில்
மிகுதியாயச்
சொல்லப்படும்
பொருளால்
பெயர் பெற்றது

களவியல்
(காதல் குறித்து
மிகுதியாகச்
சொல்வது)


நூல்
முழுமையும்
சொல்லப்படும்
பொருளால்
பெயர் பெற்றது

அகப்பொருள்
(அகப்பொருளை
விளக்குவது)


நூலைச்
செய்வித்தவனால்
பெயர் பெற்றது

வீரசோழியம்
(செய்தோன் புத்தமித்திரர்)
(செய்வித்தோன் வீரசோழன்)


நூலின் குணத்தால்
பெயர் பெற்றது

நன்னூல்
(நன்மை + நூல்)



இடுகுறிப்பெயர்கள்


காரணம்
ஏதுமின்றி
பெயர் பெற்றது


நிகண்டு
(காரணம் ஏதுமின்றி
வைக்கப்பட்டது)


கலைக்கோட்டுத் தண்டு
(காரணம் ஏதுமின்றி
வைக்கப்பட்டது)



நன்னூல்
சூத்திரம்-49


முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே

முதல்நூல் கருத்த ன்அளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் தன்மைமுத ன்நிமித்தினும்
இடுகுறி யானும்நூற் குஎய்தும் பெயரே

முதல்நூல்; (நூலைச்) செய்தோன்;
(நூலின்) அளவு; (நூலில்) மிகுதி(யாய்ச்
சொல்லப்படும் பொருள்); (நூல்
முழுமையும் சொல்லப்படும்) பொருள்;
(நூலைச்) செய்வித்தோன்; (நூலின்)
குணம் முதலிய காரணங்களாலும்
இடுகுறியாலும் (ஒரு) நூலுக்குப் பெயர்
அமையும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment