ஆசிரியரால்
கற்பிக்கப்படும்
நூற்பொருளை
மாணாக்கர்
கற்கும் தன்மையின்
அடிப்படையில்
அறியப்படுவது
மூவகை
மாணாக்கர்
அவர்கள்
முறையே
அன்னம்
பசு
போன்றவர்
தலை மாணாக்கர்
மண்
கிளி
போன்றவர்
இடை மாணாக்கர்
ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர்
இங்கு
அம்மூவகை
மாணாக்கரில்
மண்
கிளி
போன்று
கருதப்படுகின்ற
இடை மாணாக்கர்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
உழவன் செய்யும்
முயற்சிக்கு ஏற்ப
பயன்தருவது
குயவன் வனைந்த
வடிவுப்பண்பு அன்றி
தாமொரு
வடிவுப்பண்பு
கொள்ளாதது
மண்
பன்னாளும்
பயிற்றிய
சொற்கள் அன்றி
வேறொன்றும்
கூறாதது
கிளி
(சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை)
அவற்றைப்
போன்று
(மண், கிளி
போன்று)
ஆசிரியர் கற்பித்த
முயற்சியின்
அளவாக
கல்வி அறிவைப்
பெற்றிருக்கும்
மாணாக்கர்
ஆசிரியர் கற்பித்த
நூல் பொருளளவு
அன்றி
கூட்டியுணர்ந்து
சொல்லமாட்டாத
மாணாக்கர்
இடை மாணாக்கர்
நன்னூல்
சூத்திரம்-38
அன்ன
மாவே மண்ணொடு கிளியே
இல்லிக்
குடமா டெருமை நெய்யரி
அன்னர்
தலையிடை கடைமா ணாக்கர்
அன்னம் ஆவே மண்ஒடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை
நெய்யரி
அன்னர் தலைஇடை கடைமா ணாக்கர்
அன்னம்
பசு போன்றவர் தலை மாணாக்கர்;
மண்
கிளி போன்றவர் இடை மாணாக்கர்;
ஓட்டைக்குடம்
ஆடு எருமை சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர் ஆவர்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – மூவகை மாணாக்கர் - இடை மாணாக்கர்
Tamil Grammar – Three Classes of Scholars or Students - Middling
No comments:
Post a Comment