Wednesday, May 20, 2020

81) மகரக்குறுக்கம்


சார்பெழுத்து  மகரக்குறுக்கம்

Secondary Letter  Shortened m

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு

1)   குற்றியலிகரம்
2)  குற்றியலுகரம்
3)   ஐகாரக்குறுக்கம்
4)  ஔகாரக்குறுக்கம்
5)  மகரக்குறுக்கம்
6)  ஆய்தக்குறுக்கம்


இங்கு


மகரக்குறுக்கம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்



தனி மொழியில்

ளகர(ள்) லகரம்(ல்)
திரிந்த
ணகர(ண்) னகர(ன்)
மெய்களில் ஒன்றன்
முன்னும்

(உ-ம்)

மருளும் மருண்ம்
போலும் போன்ம்


தொடர் மொழியில்

வருமொழி
முதலில் நின்ற
வகர உயிர்மெய்யின்
பின்னும்

(உ-ம்)

தரும் வளவன்


வரும்
மகர மெய்யானது (ம்)

தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது

மகரக்குறுக்கம்


(உ-ம்)

மருண்ம்
போன்ம்

தரும் வளவன்


குறிப்பு:


செய்யும் என்னும்
வாய்பாட்டு
முற்றுச் சொல்லின்

ஈற்றயலிலே
உகரம் கெட நின்ற
ளகர(ள்) லகரந்(ல்) திரிந்த
ணகர(ண்) னகரமே(ன்)

இங்கே குறிப்பிடும்
ணகர(ண்) னகரம்(ன்)
என்று அறிக.


அது
(மகரக்குறுக்கம்)

இட வகையால்
மூன்று



நன்னூல்
சூத்திரம்-96


ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்

ணனமுன்னும் வஃகான் மிசையும்மக் குறுகும்

(ளகர லகரந் திரிந்த) ணகர னகர மெய்களில்
ஒன்றன் முன்னும்; (தொடர் மொழியில் வருமொழி
முதலில் நின்ற) வகர உயிர்மெய்யின் பின்னும்
வரும் மகர மெய்யானது தன்னுடைய ஒலிக்கும்
கால அளவில் குறைந்து (குறுகி) ஒலிக்கும்.



நினைவு கூர்க:


நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





80) ஔகாரக்குறுக்கம்


சார்பெழுத்து  ஔகாரக்குறுக்கம்

Secondary Letter  Shortened au

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு

1)   குற்றியலிகரம்
2)  குற்றியலுகரம்
3)   ஐகாரக்குறுக்கம்
4)  ஔகாரக்குறுக்கம்
5)  மகரக்குறுக்கம்
6)  ஆய்தக்குறுக்கம்


இங்கு


ஔகாரக்குறுக்கம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


தன்னைச்
சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும்
அல்லாத
வழிவந்த ஔகாரம் (ஔ)

சொல்லுக்கு
முதலில் மாத்திரம்

தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது

ஔகாரக்குறுக்கம்


இங்கு


ஔகாரம் (ஔ)
சொல்லுக்கு
இடையிலும்
இறுதியிலும்
வராது
என்பதனை
நினைவில்
கொள்ள வேண்டும்


அது
(ஔகாரக்குறுக்கம்)

இட வகையால்
ஒன்று

(உ-ம்)

ஔவை - மௌவல்


மேலும்


தன் பெயர் குறியாது
பொருள்குறித்து வரும்
ஓரெழுத்தொருமொழிகளான

ஔ, கௌ, சௌ,
நௌ, வௌ

என்பனவும்
குறுகும்


நன்னூல்
சூத்திரம்-95


தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்

தன்சுட் டுஅளபுஒழி ஐம்மூ வழியும்
நையு ம்ஔவு ம்முதல்அற் றுஆகும்

தன்னைச் சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும் அல்லாத வழிவந்த
ஐகாரம் சொல் முதல் இடை கடை என்னும்
மூன்றிடத்தும் குறுகும். இவ்வாறே ஔகாரம்
சொல் முதற்கண்ணே அத்தன்மை
உடையவாகும்.



நினைவு கூர்க:


நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




79) ஐகாரக்குறுக்கம்


சார்பெழுத்து  ஐகாரக்குறுக்கம்

Secondary Letter  Shortened ai

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு

1)   குற்றியலிகரம்
2)  குற்றியலுகரம்
3)   ஐகாரக்குறுக்கம்
4)  ஔகாரக்குறுக்கம்
5)  மகரக்குறுக்கம்
6)  ஆய்தக்குறுக்கம்


இங்கு


ஐகாரக்குறுக்கம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


தன்னைச்
சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும்
அல்லாத
வழிவந்த ஐகாரம் (ஐ)

சொல்லுக்கு
முதல் இடை கடை
என்னும்
மூன்றிடத்தும்

தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது

ஐகாரக்குறுக்கம்


அது
(ஐகாரக்குறுக்கம்)


இடம் சார்ந்து
மூன்று

(உ-ம்)

ஐப்பசி, வலையன், குவளை


மேலும்


தன் பெயர் குறியாது
பொருள்குறித்து வரும்

ஓரெழுத்தொருமொழிகளான

ஐ, கை, சை, தை, நை,
பை, மை, வை

என்பனவும்
குறுகும்



நன்னூல்
சூத்திரம்-95


தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்

தன்சுட் டுஅளபுஒழி ஐம்மூ வழியும்
நையு ம்ஔவு ம்முதல்அற் றுஆகும்

தன்னைச் சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும் அல்லாத வழிவந்த
ஐகாரம் சொல் முதல் இடை கடை என்னும்
மூன்றிடத்தும் குறுகும். இவ்வாறே ஔகாரம்
சொல் முதற்கண்ணே அத்தன்மை
உடையவாகும்.



நினைவு கூர்க:



நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




78) முற்றியலுகரம்


குற்றியலுகரமும் முற்றியலுகரமும்

Shortened u and Mutriyalugaram

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை


எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு

1)   குற்றியலிகரம்
2)  குற்றியலுகரம்
3)   ஐகாரக்குறுக்கம்
4)  ஔகாரக்குறுக்கம்
5)  மகரக்குறுக்கம்
6)  ஆய்தக்குறுக்கம்


இதில்
(ஆறு குறுக்கங்களில்)


தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிக்கின்ற உகரம்

குற்றியலுகரம்


விளங்கக்கூறின்


தனி நெடில்
ஏழும் (7)

ஆய்தம்
ஒன்றும் (1)

மொழிக்கு
இடையிலும்
இறுதியிலும்
வராத
ஔகாரம் (ஔ)
நீங்கிய
உயிர்
பதினொன்றும் (11)

வல்லெழுத்து
ஆறும் (6)

மெல்லெழுத்து
ஆறும் (6)

வல்லெழுத்துகளோடு
தொடராத
வகரம் நீங்கிய
இடையெழுத்து
ஐந்தும் (5)

ஆகிய
முப்பத்தாறனுள் (36)
ஒன்றால்

ஈற்றுக்கு
அயலெழுத்தாகத்
தொடரப்பட்ட
சொல்லின்
இறுதியில்

வல்லெழுத்துகளுள்
(க், ச், ட், த், ப், ற்)
யாதாயினும்
ஒன்றன்மேல்

ஏறிவரும்
உகரமானது

தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது

குற்றியலுகரம்


இங்கே
இறுதியெழுத்திற்கு
அயலெழுத்தாகச்
சொன்ன

தனி நெடில்
(ஈரெழுத்து ஒரு மொழி)

ஒழிந்த
ஐந்தெழுத்தும்
அல்லாமல்

பிற எழுத்துகளும்
மேலே
தொடர்ந்து
வரவும் பெறும்


அது
(குற்றியலுகரம்)


ஈற்றெழுத்து
அயலெழுத்தை
நோக்கி

1) நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
(காகு, காசு, காடு, காது, காபு, காறு)
2) ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(எஃகு, கஃசு, கஃடு, இருபஃது, அஃபு, சுஃறு)
3) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(வரகு, பலாசு, முருடு, எருது, துரபு, கயிறு)
4) வன்றொடர்க் குற்றியலுகரம்
(சுக்கு, கச்சு, கட்டு, கத்து, கப்பு, கற்று)
5) மென்றொடர்க் குற்றியலுகரம்
(கங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று)
6) இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(ஆய்கு, ஆய்சு, ஆய்து, ஆய்பு)

என
ஆறு வகை


இதுபோலன்றி


தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து ஒலிக்காமல்
முழு அளவில்
ஒலிக்கின்ற உகரம்

முற்றியலுகரம்


இங்கு


முற்றியலுகரம்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


மெல்லெழுத்தின்
மேலும்
இடையெழுத்தின்
மேலும்
ஏறி நிற்கும் உகரமும்

(உ-ம்)

அணு, உறுமு, தனு,
எரு, வலு, நிறைவு, ஏழு, துள்ளு


தனிக்
குற்றெழுத்தினாலே
(ஈரெழுத்து ஒரு மொழி)
தொடரப்பட்ட
வல்லெழுத்தின்
மேல்
ஏறி நிற்கும் உகரமும்

(உ-ம்)

நகு, பசு, தடு, எது, மறு


தனது
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து ஒலிக்காமல்
முழு அளவில்
ஒலிக்கின்ற

முற்றியலுகரமாம்


அதாவது


குற்றியலுகரம்
அல்லாத
உகரமெல்லாம்
முற்றியலுகரமாம்


அது
(முற்றியலுகரம்)


சொல்லின்
முதலிலும்
இடையிலும்
ஈற்றிலும்
வரும்


அதுமட்டுமன்றி


முற்றியலுகரமும்
குற்றியலுகரமும்
ஒரு சொல்லில்
வருதலும் உண்டு


உதாரணமாக


கரும்பு, கடுகு
என்பனவற்றின்

ஈற்றில் நிற்பன
குற்றியலுகரம்

இடையில் நிற்பன
முற்றியலுகரம்



நன்னூல்
சூத்திரம்-94


நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மை யூருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே

நெடிலோ டுஆய்த ம்உயிர்வலி மெலிஇடைத்
தொடர்மொழி இறுதி வன்மை ஊர்உகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே

தனி நெடில் ஏழும்(7), ஆய்தம் ஒன்றும்(1),
மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வராத
ஔகாரம் (ஔ) நீங்கிய உயிர் பதினொன்றும்(11),
வல்லெழுத்து ஆறும்(6), மெல்லெழுத்து ஆறும்(6),
வல்லெழுத்துகளோடு தொடராத வகரம் நீங்கிய
இடையெழுத்து ஐந்தும்(5), ஆகிய முப்பத்தாறனுள் (36) 
ஒன்றால்; ஈற்றுக்கு அயலெழுத்தாகத்
தொடப்பட்ட சொல்லின் இறுதியில்
வல்லெழுத்துகளுள் யாதாயினும் ஒன்றன்மேல்
ஏறிவரும் உகரமானது தன்னுடைய ஒலிக்கும் கால 
அளவில் குறைந்து (குறுகி) ஒலிப்பது குற்றியலுகரம்.
இங்கே இறுதியெழுத்திற்கு அயலெழுத்தாகச்
சொன்ன தனி நெடில் ஒழிந்த ஐந்தெழுத்தும்
அல்லாமல் பிற எழுத்துகளும் மேலே தொடர்ந்து
வரவும் பெறும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar