Wednesday, May 20, 2020

66) முதலெழுத்துகளுக்கு முயற்சிப்பிறப்பு - மெய்யெழுத்துகள்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
சார்பு எழுத்து

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
மெய் எழுத்து

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இங்கு


மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற

முதலெழுத்துகளின்
முயற்சிப்பிறப்பு
(மெய்யெழுத்துகள்)
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்


இம்முறைமைப்படி


உயிரெழுத்துகளுக்கும்
மற்றும்
மெய்யெழுத்துகளில்
இடையினத்திற்கும்
இடப்பிறப்பு

கழுத்து


மெய்யெழுத்துகளில்
மெல்லினத்திற்கு
இடப்பிறப்பு

மூக்கு


மெய்யெழுத்துகளில்
வல்லினத்திற்கு
இடப்பிறப்பு

மார்பு

மேலும்
நாம்
அறியவேண்டியது


மெய்யெழுத்துகளுக்கான
முயற்சிப்பிறப்பு


க் ங் ச் ஞ் ட் ண்
த் ந் ப் ம் ய் ர்
ல் வ் ழ் ள் ற் ன்

என்னும்
ககரம் முதலாகிய
பதினெட்டு
மெய்யெழுத்துகளுள்


க் ங்
ஆகிய இரண்டும்

முதல்நா
முதலண்ணத்தைப்
பொருந்தப் பிறக்கும்


ச் ஞ்
ஆகிய இரண்டும்

இடைநா
இடையண்ணத்தைப்
பொருந்தப் பிறக்கும்


ட் ண்
ஆகிய இரண்டும்

நுனிநா
நுனியண்ணத்தைப்
பொருந்தப் பிறக்கும்


த் ந்
ஆகிய இரண்டும்

மேல்வாய்ப்பல்லின்
அடியை
நாவினது நுனி
பொருந்தப் பிறக்கும்


ப் ம்
ஆகிய இரண்டும்

மேலுதடும்
கீழுதடும்
பொருந்தப் பிறக்கும்


ய்
என்னும் எழுத்து

அடிநா
அடியண்ணத்தைப்
பொருந்தப் பிறக்கும்


ர் ழ்
ஆகிய இரண்டும்

மேல்வாயை
நுனிநா
தடவப் பிறக்கும்


ல்
என்னும் எழுத்து

மேல்வாய்ப்பல் அடியை
நா விளிம்பு வீங்கி
ஒற்றப் பிறக்கும்


ள்
என்னும் எழுத்து

மேல்வாயை
நா விளிம்பு வீங்கி
வருடப் பிறக்கும்


வ்
என்னும் எழுத்து

மேல்வாய்ப் பல்லைக்
கீழுதடு
பொருந்தப் பிறக்கும்


ற் ன்
ஆகிய இரண்டும்

மேல்வாயை
நாவினது நுனி
மிகுதியும்
பொருந்தப் பிறக்கும்



நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-75


அவ்வழி
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை

அவ்வழி
ஆவி இடைமை இடம்மிட றுஆகும்
மேவு மென்மைமூக் குஉரம்பெறும் வன்மை

மேற்சொன்ன பிறப்பு முறைமைப்படி
உயிரெழுத்துகளுக்கும் இடையினத்திற்கும்
இடப்பிறப்பு கழுத்து ஆகும், மெல்லினத்திற்கு
இடப்பிறப்பாக பொருந்துவது மூக்கு. மார்பை
இடப்பிறப்பாக பெறுவது வல்லினம்.


நன்னூல்
சூத்திரம்-79


கஙவும் சஞவும் டணவு முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே

கஙவும் சஞவும் டணவு ம்முதல்இடை
நுனிநா அண்ண ம்உறமுறை வருமே

க் ங் (ஆகிய இரண்டும்) முதல்நா
முதலண்ணத்தைப் பொருந்த;
ச் ஞ் (ஆகிய இரண்டும்) இடைநா
இடையண்ணத்தைப் பொருந்த;
ட் ண் (ஆகிய இரண்டும்) நுனிநா
நுனியண்ணத்தைப் பொருந்தப்
பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-80


அண்ப லடிநா முடியுறத் தநவரும்

அண்ப ல்அடிநா முடிஉறத் தநவரும்

மேல்வாய்ப்பல்லின் அடியை
நாவினது நுனி பொருந்த
த் ந் (ஆகிய இரண்டும்) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-81


மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும்

மீகீ ழ்இதழ்உறப் ம்ப் பிறக்கும்

மேலுதடும் கீழுதடும் பொருந்த
ப் ம் (ஆகிய இரண்டும்) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-82


அடிநா வடியண முறயத் தோன்றும்

அடிநா அடிஅண ம்உறத் தோன்றும்

அடிநா அடியண்ணத்தைப் பொருந்த
ய் (என்னும் எழுத்து) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-83


அண்ண நுனிநா வருட ரழவரும்

அண்ணம் நுனிநா வருட ரழவரும்

மேல்வாயை நுனிநா தடவ
ர் ழ் (ஆகிய இரண்டும்) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-84


அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்

அண்பல் முதலு ம்அண்ணமு ம்முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
கார காரம்ஆ ய்இரண்டும் பிறக்கும்

மேல்வாய்ப்பல் அடியை நா விளிம்பு
வீங்கி ஒற்ற ல் (என்னும் எழுத்தும்)
மேல்வாயை நா விளிம்பு வீங்கி வருட
ள் (என்னும் எழுத்தும்) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-85


மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே

மேல்பல் இதழ்உற மேவிடும் வவ்வே

மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த
வ் (என்னும் எழுத்து) பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-86


அண்ண நுனிநா நனியுற றனவரும்

அண்ணம் நுனிநா நனிஉற றனவரும்

மேல்வாயை நாவினது நுனி மிகுதியும்
பொருந்த ற் ன் (ஆகிய இரண்டும்)
பிறக்கும்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் முதலெழுத்துகளுக்கு முயற்சிப்பிறப்பு (மெய்யெழுத்துகள்)

Tamil Grammar The Production Of Primary Letters (Consonants)



No comments:

Post a Comment