மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
அது
முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)
என
இரு வகையாம்
உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)
ஆகிய இரண்டும்
முதலெழுத்து
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும்
சார்பெழுத்து
இங்கு
சார்பு எழுத்துகளில்
ஒன்றான
உயிர்மெய்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
மெய் எழுத்தும்
உயிர் எழுத்தும்
கூடிப் பிறக்கும்
எழுத்து
உயிர்மெய் எழுத்து
(Vowel Consonant)
அதாவது
பன்னிரண்டு (12)
உயிரெழுத்துகளும்
பதினெட்டு (18)
மெய்யெழுத்துகளின்
மேலேறுதலால்
உண்டாவது
உயிர்மெய் எழுத்து
(Vowel Consonant)
விளங்கக்கூறின்
மெய் எழுத்து
அகர உயிரோடு
கூடியபொழுது
புள்ளியை விட்டு
அவ்வாறு
விட்ட வடிவே
தனக்கு
வடிவாகியும்
க் + அ = க
.
.
.
ன் + அ = ன
‘ஆ’ முதலிய
மற்றை
உயிர்களோடு
கூடியபொழுது
புள்ளி விடுதல்
மாத்திரமே அன்றி
தனது வடிவில்
வேறுபட்டும்
க் + ஆ = கா
.
.
.
க் + ஔ = கௌ
மெய்யெழுத்தின்
ஒலிக்கும்
கால அளவு
வெளிபடாமல்
மெய்யெழுத்தின்
மேலேறிய
உயிரின்
ஒலிக்கும்
கால அளவே
தனக்கு
ஒலிக்கும்
கால அளவாகி
அவ்வுயிரின்
வடிவைத்
தம்முள்ளே
மறைத்து
மெய்யும் உயிரும்
ஆகிய
இரண்டிடத்தும்
பிறந்த
உயிர்மெய் என்னும்
பெயருடனும்
மெய்யொலி
முன்னும்
உயிரொலி
பின்னுமாகி
உயிர்மெய்யெழுத்து
வரும்
அதன்
(உயிர்மெய்யெழுத்தின்)
எண்ணிக்கை
(18 x 12 = 216)
இருநூற்றுப்பதினாறு
மேலும்
உயிர்மெய் எழுத்துகள்
இருநூற்றுப்பதினாறும்
உயிரெழுத்துகளில்
குறில் நெடில்
அடிப்படையில்
உயிர்மெய்க்குறில் - 90
(18 x 5 = 90)
உயிர்மெய்நெடில் – 126
(18 x 7 = 126)
என்றும்
மெய்யெழுத்துகளில்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
அடிப்படையில்
வல்லின உயிர்மெய் - 72
(6 x 12 = 72)
மெல்லின உயிர்மெய் - 72
(6 x 12 = 72)
இடையின உயிர்மெய் – 72
(6 x 12 = 72)
என்றும்
பகுத்து
அறியப்படும்
நன்னூல்
சூத்திரம்-89
புள்ளிவிட்
டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை
யுயிரோ டுருவு திரிந்தும்
உயிரள
வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு
மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய்
புள்ளிவிட்
டுஅவ்வொடு முன்உரு வுஆகியும்
ஏனை உயிரோ
டுஉருவு திரிந்தும்
உயிர்அள
வுஆய்அதன் வடிவுஒழித் துஇருவயின்
பெயரொடு
ம்ஒற்றுமுன் ஆய்வரு ம்உயிர்மெய்
(மெய்
எழுத்து அகர உயிரோடு கூடியபொழுது)
புள்ளியை
விட்டு அவ்வாறு விட்ட வடிவே
தனக்கு
வடிவாகியும்; (‘ஆ’ முதலிய) மற்றை
உயிர்களோடு
(கூடியபொழுது புள்ளி விடுதல்
மாத்திரமே
அன்றி தனது) வடிவில் வேறுபட்டும்;
(தனது
ஒலிக்கும் கால அளவு வெளிபடாமல் தன்
மேலேறிய)
உயிரின் அளவே தனக்கு அளவாகி,
அவ்வுயிரின்
வடிவைத் தம்முள்ளே மறைத்து,
மெய்யும்
உயிரும் ஆகிய இரண்டிடத்தும் பிறந்த
உயிர்மெய்
என்னும் பெயருடனும்;
மெய்யொலி
முன்னும் உயிரொலி பின்னுமாகி
உயிர்மெய்யெழுத்து வரும்
நினைவு கூர்க
நன்னூல்
சூத்திரம்-58
மொழிமுதற்
காரண மாமணுத் திரளொலி
எழுத்தது
முதல்சார் பெனவிரு வகைத்தே
மொழிமுதல்
காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது
முதல்சார் புஎனஇரு வகைத்தே
மொழிக்கு
முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே
எழுத்து; அது முதல் சார்பு என
இரு
வகையாம்
நன்னூல்
சூத்திரம்-59
உயிரு
முடம்புமா முப்பது முதலே
உயிரு ம்உடம்பும்ஆம்
முப்பது முதலே
உயிர்
எழுத்து (பன்னிரண்டும்)
மெய்
எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது
எழுத்து முதலெழுத்தாம்
நன்னூல்
சூத்திரம்-60
உயிர்மெய்
யாய்த முயிரள பொற்றள
பஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்துஞ் சார்பெழுத் தாகும்
உயிர்மெய்
ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்தும் சார்பெழுத் துஆகும்
உயிர்மெய்,
ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை
(உயிரளபு),
ஒற்றளபெடை
(ஒற்றளபு),
குற்றியலிகரம்,
(அஃகிய இ)
குற்றியலுகரம்
(அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம்
(அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம்
(அஃகிய ஔ),
மகரக்குறுக்கம்
(அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம்
(அஃகிய தனிநிலை)
ஆகிய
பத்தும் சார்பெழுத்து ஆகும்.
நன்னூல்
சூத்திரம்-61
உயிர்மெய்
யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி
ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே
ழஃகு மிம்முப் பானேழ்
உகர
மாறா றைகான் மூன்றே
ஔகா
னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த
மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி
முந்நூற் றெழுபா னென்ப
உயிர்மெய்
இரட்டுநூற் றுஎட்டுஉய
ர்ஆய்தம்
எட்டுஉயி
ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு
ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ
றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே
மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு
சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி
முந்நூற் றுஎழுபா ன்என்ப
உயிர்மெய்
இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம்
எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை
நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு;
குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம்
மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று;
மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு
சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று
குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று
அறுபத்தொன்பது என்பர்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – சார்பெழுத்து - உயிர்மெய்
எழுத்துகள்
Tamil Grammar – Secondary Letter – Vowel Consonants
No comments:
Post a Comment