மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
அது
முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)
என
இரு வகையாம்
உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)
ஆகிய இரண்டும்
முதலெழுத்து
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும்
சார்பெழுத்து
அச்சார்பு
எழுத்துகளில்
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு
1)
உயிரளபெடை
2)
ஒற்றளபெடை
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு
1)
குற்றியலிகரம்
2)
குற்றியலுகரம்
3)
ஐகாரக்குறுக்கம்
4)
ஔகாரக்குறுக்கம்
5)
மகரக்குறுக்கம்
6)
ஆய்தக்குறுக்கம்
இங்கு
ஔகாரக்குறுக்கம்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
தன்னைச்
சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும்
அல்லாத
வழிவந்த ஔகாரம் (ஔ)
சொல்லுக்கு
முதலில் மாத்திரம்
தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது
ஔகாரக்குறுக்கம்
இங்கு
ஔகாரம் (ஔ)
சொல்லுக்கு
இடையிலும்
இறுதியிலும்
வராது
என்பதனை
நினைவில்
கொள்ளவேண்டும்
அது
(ஔகாரக்குறுக்கம்)
இட வகையால்
ஒன்று
(உ-ம்)
ஔவை - மௌவல்
மேலும்
தன் பெயர் குறியாது
பொருள் குறித்து வரும்
ஓரெழுத்தொருமொழிகளான
ஔ, கௌ, சௌ,
நௌ, வௌ
என்பனவும்
குறுகும்
நன்னூல்
சூத்திரம்-95
தற்சுட்
டளபொழி யைம்மூ வழியும்
நையு
மௌவு முதலற் றாகும்
தன்சுட்
டுஅளபுஒழி ஐம்மூ வழியும்
நையு ம்ஔவு
ம்முதல்அற் றுஆகும்
தன்னைச் சுட்டுதற்கண்ணும்
அளபெடுத்தற்கண்ணும் அல்லாத வழிவந்த
ஐகாரம் சொல் முதல் இடை கடை என்னும்
மூன்றிடத்தும் குறுகும். இவ்வாறே ஔகாரம்
சொல் முதற்கண்ணே அத்தன்மை
உடையவாகும்.
நினைவு கூர்க:
நன்னூல்
சூத்திரம்-58
மொழிமுதற்
காரண மாமணுத் திரளொலி
எழுத்தது
முதல்சார் பெனவிரு வகைத்தே
மொழிமுதல்
காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது
முதல்சார் புஎனஇரு வகைத்தே
மொழிக்கு
முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே
எழுத்து; அது முதல் சார்பு என
இரு
வகையாம்
நன்னூல்
சூத்திரம்-59
உயிரு
முடம்புமா முப்பது முதலே
உயிரு ம்உடம்பும்ஆம்
முப்பது முதலே
உயிர்
எழுத்து (பன்னிரண்டும்)
மெய்
எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது
எழுத்து முதலெழுத்தாம்
நன்னூல்
சூத்திரம்-60
உயிர்மெய்
யாய்த முயிரள பொற்றள
பஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்துஞ் சார்பெழுத் தாகும்
உயிர்மெய்
ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்தும் சார்பெழுத் துஆகும்
உயிர்மெய்,
ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை
(உயிரளபு),
ஒற்றளபெடை
(ஒற்றளபு),
குற்றியலிகரம்,
(அஃகிய இ)
குற்றியலுகரம்
(அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம்
(அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம்
(அஃகிய ஔ),
மகரக்குறுக்கம்
(அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம்
(அஃகிய தனிநிலை)
ஆகிய
பத்தும் சார்பெழுத்து ஆகும்.
நன்னூல்
சூத்திரம்-61
உயிர்மெய்
யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி
ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே
ழஃகு மிம்முப் பானேழ்
உகர
மாறா றைகான் மூன்றே
ஔகா
னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த
மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி
முந்நூற் றெழுபா னென்ப
உயிர்மெய்
இரட்டுநூற் றுஎட்டுஉய
ர்ஆய்தம்
எட்டுஉயி
ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு
ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ
றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே
மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு
சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி
முந்நூற் றுஎழுபா ன்என்ப
உயிர்மெய்
இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம்
எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை
நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு;
குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம்
மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று;
மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு
சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று
குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று
அறுபத்தொன்பது என்பர்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – சார்பெழுத்து – ஔகாரக்குறுக்கம்
No comments:
Post a Comment