Wednesday, May 20, 2020

65) முதலெழுத்துகளுக்கு முயற்சிப்பிறப்பு - உயிரெழுத்துகள்


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
சார்பு எழுத்து

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
மெய் எழுத்து

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இங்கு


மொழிக்கு
முதன்மையாயும்
பிற எழுத்துகள்
தோன்றுவதற்கு
அடிப்படையாயும்
அமைகின்ற

முதலெழுத்துகளின்
முயற்சிப்பிறப்பு
(உயிரெழுத்துகள்)
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்


இம்முறைமைப்படி


உயிரெழுத்துகளுக்கும்
மற்றும்
மெய்யெழுத்துகளில்
இடையினத்திற்கும்
இடப்பிறப்பு

கழுத்து


மேலும்
நாம்
அறியவேண்டியது


உயிரெழுத்துகளுக்கான
முயற்சிப்பிறப்பு


அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ

என்னும்
அகரம் முதலாகிய
பன்னிரண்டு
உயிரெழுத்துகளுள்

அ ஆ
ஆகிய இரண்டும்

நால்வகை
முயற்சிகளில்
அண்ணத்தின்
தொழிலாகிய
வாயைத்
திறத்தலினால்
பிறக்கும்


இங்கு

அண்ணம் (அணம்)
என்பது
மேல்வாயும் கீழ்வாயும்


இ ஈ எ ஏ ஐ
ஆகிய ஐந்தும்

வாய் திறத்தலுடன்
மேல்வாய்ப் பல்லை
அடி நாக்கினது
ஓரமானது
தொடும்
முயற்சியால்
பிறக்கும்


உ ஊ ஒ ஓ ஔ
ஆகிய ஐந்தும்

இதழைக்
குவித்துச்
சொல்லும்
முயற்சியால்
பிறக்கும்


இதன்
அடிப்படையில்


உ ஊ ஒ ஓ ஔ
ஆகிய ஐந்தும்

இதழ் குவிந்த
உயிரெழுத்துகள்
என்றும்


அ ஆ இ ஈ எ ஏ ஐ
ஆகிய ஏழும்

இதழ் குவியா
உயிரெழுத்துகள்
என்றும்

பெயரிட்டு
அழைக்கப்பெறும்.


நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-75


அவ்வழி
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை

அவ்வழி
ஆவி இடைமை இடம்மிட றுஆகும்
மேவு மென்மைமூக் குஉரம்பெறும் வன்மை

மேற்சொன்ன பிறப்பு முறைமைப்படி
உயிரெழுத்துகளுக்கும் இடையினத்திற்கும்
இடப்பிறப்பு கழுத்து ஆகும், மெல்லினத்திற்கு
இடப்பிறப்பாக பொருந்துவது மூக்கு. மார்பை
இடப்பிறப்பாக பெறுவது வல்லினம்.


நன்னூல்
சூத்திரம்-76


அவற்றுள்
முயற்சியுள் அஆ வங்காப் புடைய

அவற்றுள்
முயற்சியுள் அஆ அங்காப் புஉடைய

அவற்றுள் அஆ ஆகிய இரண்டும்
(நால்வகை) முயற்சிகளில் (அண்ணத்தின்
தொழிலாகிய) வாயைத் திறத்தலினால்
பிறக்கும்


நன்னூல்
சூத்திரம்-77


இஈ எஏ ஐயங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே

இஈ எஏ ஐஅங் காப்புஓ
டுஅண்பல் முதல்நா விளிம்புஉற வருமே

இ ஈ எ ஏ ஐ ஆகிய ஐந்தும் வாய்
திறத்தலுடனே மேல்வாய் பல்லை
அடி நாக்கினது ஓரமானது தொடும்
முயற்சியால் பிறக்கும்.


நன்னூல்
சூத்திரம்-78


உஊ ஒஓ ஔவிதழ் குவிவே

உஊ ஒஓ ஔஇதழ் குவிவே

உஊ ஒஓ ஔ இதழைக் குவித்துச்
சொல்லும் முயற்சியால் பிறக்கும்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் முதலெழுத்துகளுக்கு முயற்சிப்பிறப்பு (உயிரெழுத்துகள்)

Tamil Grammar The Production Of Primary Letters (Vowels)



No comments:

Post a Comment