மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
அது
முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)
என
இரு வகையாம்
உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)
ஆகிய இரண்டும்
முதலெழுத்து
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும்
சார்பெழுத்து
அச்சார்பு
எழுத்துகளில்
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு
1)
உயிரளபெடை
2)
ஒற்றளபெடை
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவைக்
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு
1)
குற்றியலிகரம்
2)
குற்றியலுகரம்
3)
ஐகாரக்குறுக்கம்
4)
ஔகாரக்குறுக்கம்
5)
மகரக்குறுக்கம்
6)
ஆய்தக்குறுக்கம்
இதில்
(ஆறு குறுக்கங்களில்)
தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிக்கின்ற உகரம்
குற்றியலுகரம்
விளங்கக்கூறின்
தனி நெடில்
ஏழும் (7)
ஆய்தம்
ஒன்றும் (1)
மொழிக்கு
இடையிலும்
இறுதியிலும்
வராத
ஔகாரம் (ஔ)
நீங்கிய
உயிர்
பதினொன்றும் (11)
வல்லெழுத்து
ஆறும் (6)
மெல்லெழுத்து
ஆறும் (6)
வல்லெழுத்துகளோடு
தொடராத
வகரம் நீங்கிய
இடையெழுத்து
ஐந்தும் (5)
ஆகிய
முப்பத்தாறனுள் (36)
ஒன்றால்
ஈற்றுக்கு
அயலெழுத்தாகத்
தொடரப்பட்ட
சொல்லின்
இறுதியில்
வல்லெழுத்துகளுள்
(க், ச், ட், த், ப்,
ற்)
யாதாயினும்
ஒன்றன்மேல்
ஏறிவரும்
உகரமானது
தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது
குற்றியலுகரம்
இங்கே
இறுதியெழுத்திற்கு
அயலெழுத்தாகச்
சொன்ன
தனி நெடில்
(ஈரெழுத்து ஒரு மொழி)
ஒழிந்த
ஐந்தெழுத்தும்
அல்லாமல்
பிற எழுத்துகளும்
மேலே
தொடர்ந்து
வரவும் பெறும்
அது
(குற்றியலுகரம்)
ஈற்றெழுத்து
அயலெழுத்தை
நோக்கி
1) நெடிற்றொடர்க்
குற்றியலுகரம்
(காகு, காசு, காடு,
காது, காபு, காறு)
2) ஆய்தத்தொடர்க்
குற்றியலுகரம்
(எஃகு, கஃசு, கஃடு,
இருபஃது, அஃபு, சுஃறு)
3) உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம்
(வரகு, பலாசு, முருடு,
எருது, துரபு, கயிறு)
4) வன்றொடர்க்
குற்றியலுகரம்
(சுக்கு, கச்சு, கட்டு,
கத்து, கப்பு, கற்று)
5) மென்றொடர்க்
குற்றியலுகரம்
(கங்கு, பஞ்சு, வண்டு,
பந்து, அம்பு, கன்று)
6) இடைத்தொடர்க்
குற்றியலுகரம்
(ஆய்கு, ஆய்சு, ஆய்து,
ஆய்பு)
என
ஆறு வகை
இதுபோலன்றி
தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து ஒலிக்காமல்
முழு அளவில்
ஒலிக்கின்ற உகரம்
முற்றியலுகரம்
இங்கு
முற்றியலுகரம்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
மெல்லெழுத்தின்
மேலும்
இடையெழுத்தின்
மேலும்
ஏறி நிற்கும் உகரமும்
(உ-ம்)
அணு, உறுமு, தனு,
எரு, வலு, நிறைவு,
ஏழு, துள்ளு
தனிக்
குற்றெழுத்தினாலே
(ஈரெழுத்து ஒரு மொழி)
தொடரப்பட்ட
வல்லெழுத்தின்
மேல்
ஏறி நிற்கும் உகரமும்
(உ-ம்)
நகு, பசு, தடு, எது,
மறு
தனது
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து ஒலிக்காமல்
முழு அளவில்
ஒலிக்கின்ற
முற்றியலுகரமாம்
அதாவது
குற்றியலுகரம்
அல்லாத
உகரமெல்லாம்
முற்றியலுகரமாம்
அது
(முற்றியலுகரம்)
சொல்லின்
முதலிலும்
இடையிலும்
ஈற்றிலும்
வரும்
அதுமட்டுமன்றி
முற்றியலுகரமும்
குற்றியலுகரமும்
ஒரு சொல்லில்
வருதலுமுண்டு
உதாரணமாக
கரும்பு, கடுகு
என்பனவற்றின்
ஈற்றில் நிற்பன
குற்றியலுகரம்
இடையில் நிற்பன
முற்றியலுகரம்
நன்னூல்
சூத்திரம்-94
நெடிலோ
டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி
யிறுதி வன்மை யூருகரம்
அஃகும்
பிறமேற் றொடரவும் பெறுமே
நெடிலோ
டுஆய்த ம்உயிர்வலி மெலிஇடைத்
தொடர்மொழி
இறுதி வன்மை ஊர்உகரம்
அஃகும்
பிறமேல் தொடரவும் பெறுமே
தனி நெடில்
ஏழும்(7), ஆய்தம் ஒன்றும்(1),
மொழிக்கு
இடையிலும் இறுதியிலும் வராத
ஔகாரம்
(ஔ) நீங்கிய உயிர் பதினொன்றும்(11),
வல்லெழுத்து ஆறும்(6), மெல்லெழுத்து ஆறும்(6),
வல்லெழுத்துகளோடு
தொடராத வகரம் நீங்கிய
இடையெழுத்து ஐந்தும்(5), ஆகிய முப்பத்தாறனுள்
(36)
ஒன்றால்; ஈற்றுக்கு அயலெழுத்தாகத்
தொடப்பட்ட
சொல்லின் இறுதியில்
வல்லெழுத்துகளுள்
யாதாயினும் ஒன்றன்மேல்
ஏறிவரும்
உகரமானது தன்னுடைய ஒலிக்கும் கால
அளவில் குறைந்து (குறுகி) ஒலிப்பது குற்றியலுகரம்.
இங்கே இறுதியெழுத்திற்கு
அயலெழுத்தாகச்
சொன்ன தனி
நெடில் ஒழிந்த ஐந்தெழுத்தும்
அல்லாமல்
பிற எழுத்துகளும் மேலே தொடர்ந்து
வரவும்
பெறும்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – குற்றியலுகரமும் முற்றியலுகரமும்
Tamil Grammar – Shortened u and Mutriyalugaram
No comments:
Post a Comment