சார்பெழுத்து – உயிரளபெடை – 01-செய்யுளிசை அளபெடை
Secondary Letter – Vowel Prolongation-01
செய்யுளில்
ஓசை
குறையும்போது
அவ்வோசை
குறைந்த
சொல்லுக்கு
முதலிலும்
இடையிலும்
இறுதியிலும்
நின்ற
நெட்டெழுத்து
ஏழும்
அவ்வோசையை
நிறைக்க
தத்தம்
ஒலிக்கும் கால அளவில்
மிகுந்து ஒலிப்பது
உயிரளபெடை
அவ்வாறு
அளபெடுத்தமையை
அறிதற்கு
அவற்றின் பின்
(நெட்டெழுத்துகளின்
பின்)
(ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ)
அததற்கு
இனமாகிய
குற்றெழுத்துகள்
(அ இ உ எ இ ஒ உ)
அடையாளமாய்
வரும்
அது
(உயிரளபெடை)
அளபெடுக்கும்
இடம் சார்ந்து
மூவகை
முதல்நிலை அளபெடை
இடைநிலை அளபெடை
கடைநிலை அளபெடை
அளபெடுக்கும்
தன்மை சார்ந்து
மூவகை
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
இங்கு
உயிரளபெடைகளில்
ஒன்றான
செய்யுளிசை அளபெடை
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
செய்யுளில்
ஓசை
குறையும்போது
அளபெடுத்து
ஓசையை
நிறைவு செய்வது
செய்யுளிசை அளபெடை
(இசைநிறை அளபெடை)
(உ-ம்)
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு ம்அவர்
(திருக்குறள்
– 653)
இங்கு
செய்யுளிசை
அளபெடைக்கான
விளக்கம் பெற
உதாரணமாக
எடுத்துக்கொள்வது
ஒரு
குறள் வெண்பா
என்பதால்
முதலில் நாம்
அறியவேண்டியவை
வெண்பாவிற்கான
சீர், தளை
மற்றும் ஓசை
வெண்பாவிற்கான
சீர்
ஈரசைச் சீர்களான
மாச்சீரையும்
விளச்சீரையும்
பெற்று வரும்
மூவசைச் சீர்களில்
காய்ச்சீர்
மட்டுமே வரும்
கனிச்சீர் வராது
வெண்பாவிற்கான
தளை
வெண்டளை
அதன்
இரு வகை
இயற்சீர் வெண்டளை
மா முன் நிரை
விளம் முன் நேர்
வெண்சீர் வெண்டளை
காய் முன் நேர்
வெண்பாவிற்கான
ஓசை
செப்பலோசை
(வினாவுக்கு
விடை
செப்புவதுபோல்
அமைந்திருப்பதால்
செப்பலோசை)
இதன்படி
உதாரணமாக
எடுத்துக்கொள்ளப்பட்ட
இக்குறள்
அளபெடுக்காத
நிலையில்
தேமா
தேமா புளிமாங்காய்
கூவிளம்
நேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரை
ஓ/தல்
வேண்/டும் ஒளி/மாழ்/கும் செய்/வினை
ஆ/தும்
என்/னு மவர்
நேர்நேர்
நேர்நேர் நிரை
தேமா
தேமா மலர்
வெண்பாவிற்கான
சீர் மற்றும்
தளைகளைப் பெறாது
ஓசையில்
குறைவுபடுவதை
அறியலாம்
(வெண்பா
இலக்கணப்படி
மா
முன் நிரை
வருதல்
வேண்டும்
ஆனால்
மா
முன் நேர்
வந்துள்ளது)
அதுவே
அளபெடுத்த
நிலையில்
கூவிளம்
தேமா புளிமாங்காய் கூவிளம்
நேர்நிரை
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரை
ஓ/ஒதல்
வேண்/டும் ஒளி/மாழ்/கும் செய்/வினை
ஆ/அதும்
என்/னு மவர்
நேர்நிரை
நேர்நேர் நிரை
கூவிளம்
தேமா மலர்
வெண்பாவிற்கான
சீர் மற்றும்
தளைகளைப் பெற்று
ஓசையை
நிறைவுசெய்வதை
அறியலாம்
(அளபெடுத்ததால்
மா
முன் நேர்
என்பது
விளம்
முன் நேர்
என
மாறி
வெண்பா
இலக்கணத்தை
நிறைவு
செய்துள்ளது)
இவ்வாறு
செய்யுளில்
ஓசை
குறையும்போது
அளபெடுத்து
ஓசையை
நிறைவு செய்வது
செய்யுளிசை
அளபெடையாம்
நன்னூல்
சூத்திரம்-91
இசைகெடின்
மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு
மவற்றவற் றினக்குறில் குறியே
இசைகெடின்
மொழிமுத ல்இடைகடை நிலைநெடில்
அளபுஎழு
ம்அவற்றுஅவற் றின்இனக்குறில் குறியே
(செய்யுளில்)
ஓசை குறையும்போது (அவ்வோசை
குறைந்த
சொல்லுக்கு) முதலிலும் இடையிலும்
இறுதியிலும்
நின்ற நெட்டெழுத்து (ஏழும்
அவ்வோசையை
நிறைக்க தத்தம்) ஒலிக்கும்
கால அளவில் மிகுந்து ஒலிக்கும் (அது உயிரளபெடை)
(அவ்வாறு
அளபெடுத்தமையை) அறிதற்கு
(அவற்றின்
பின்) அததற்கு இனமாகிய
குற்றெழுத்துகள்
அடையாளமாய் வரும்
No comments:
Post a Comment