மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி
நிறைந்த
உயிரினது
முயற்சியால்
உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப
எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்
(இடப் பிறப்பு)
மார்பு
கழுத்து
தலை
மூக்கு
ஆகிய
இடங்களைப்
பொருந்தி
(முயற்சிப் பிறப்பு)
உதடு
நாக்கு
பல்
அண்ணம்
ஆகியவற்றின்
முயற்சியால்
வெவ்வேறு
வகைப்பட்ட
எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்
எழுத்துகளின்
பிறப்பாம்
இம்முறைமைப்படி
பல எழுத்திற்கு
இடப்பிறப்பு
முயற்சிப்பிறப்பு
ஒன்றாகச்
சொல்லப்
பட்டிருந்தாலும்
உயர்த்திக் கூறுதல்
(எடுத்தல்)
தாழ்த்திக் கூறுதல்
(படுத்தல்)
வருந்திக் கூறுதல்
(நலிதல்)
என்னும்
எழுத்திற்கு உரிய
மூவகை
ஒலி முயற்சியினால்
அவ்வவற்றுள்ளே
சிறிதளவு
வேறுபாடும்
உடையனவாம்
நன்னூல்
சூத்திரம்-74
நிறையுயிர்
முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத்
திரளுரங் கண்ட முச்சி
மூக்குற்
றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே
றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே
நிறைஉயிர்
முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத்
திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம்
தொழிலின்
வெவ்வே
றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே
(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால்
உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது
எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்
மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய
இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு,
பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால்
வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான
ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின்
பிறப்பு ஆகும்.
நன்னூல்
சூத்திரம்-88
எடுத்தல்
படுத்த னலித லுழப்பில்
திரிபுந்
தத்தமிற் சிறிதுள வாகும்
எடுத்தல்
படுத்த ல்நலித ல்உழப்பில்
திரிபும்
தத்தம்இல் சிறிதுஉள ஆகும்
(பல
எழுத்திற்கு இடப்பிறப்பு முயற்சிப்பிறப்பு
ஒன்றாகச்
சொல்லப்பட்டிருந்தாலும்) உயர்த்திக்
கூறுதல் (எடுத்தல்); தாழ்த்திக்
கூறுதல் (படுத்தல்);
வருந்திக்
கூறுதல் (நலிதல்) என்னும் (எழுத்திற்கு
உரிய மூவகை ஒலி) முயற்சியினால்
அவ்வவற்றுள்ளே
சிறிதளவு வேறுபாடும்
உடையன
ஆகும்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – எழுத்துகள்
பிறப்பின் புறனடை
Tamil Grammar – Exceptional To The Production Of Letters
புறனடை –
விதித்தவற்றுள்
அடங்காதனவற்றை அமைத்துக் காட்டும் பொதுச் சூத்திரம்
(புறனடைச் சூத்திரம்)
No comments:
Post a Comment