Wednesday, May 20, 2020

75) ஒற்றளபெடை


மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


அச்சார்பு
எழுத்துகளில்

எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு


1)   உயிரளபெடை
2)  ஒற்றளபெடை



இங்கு


ஒற்றளபெடை
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


செய்யுளில்
ஓசை
குறையும்போது

இரண்டு
குற்றெழுத்தின்
பின்னும்

ஒரு
குற்றெழுத்தின்
பின்னும்

சொல்லின்
இடையிலும்
இறுதியிலும்
நின்ற

ங்ஞ்ண்
ந்ம்ன்
வ்ய்ல்ள்
என்னும்
பத்து
மெய்யும்

ஆய்தமும்


அவ்வோசையை
நிறைக்க

தத்தம்
ஒலிக்கும் கால அளவில்
மிகுந்து ஒலிப்பது

ஒற்றளபெடை


அவ்வாறு
அளப்பெடுத்தமையை
அறிதற்கு

அவற்றின்பின்
அவ்வெழுத்தே
மற்றொரு முறை
அடையாளமாய்
வரும்


ங்ஞ்ண் ந்ம்ன் வ்ய்ல்ள்
என்னும்
பத்து மெய்யும் (10)

ஆய்தமும் (1)

சொல்லில்
குறிலிணைகீழ் இடை
குறிலிணைகீழ் கடை
குறிற்கீழ் இடை
குறிற்கீழ் கடை
என்னும்
நான்கிடத்தில்
அளபெடுக்கும்

அதனைக்
கருத்தில் கொண்டால்

ஒற்றளபெடை
(11 x 4 = 44)
நாற்பத்து நான்கு

ஆய்தம்
சொல்லின்
இறுதியில்
வராது என்பதால்

அதற்குக்
குறிலிணைகீழ் கடை
குறிற்கீழ் கடை
இரண்டும்
கழிக்க
ஒற்றளபெடை
நாற்பத்திரண்டு (42)


(உ-ம்)

இலங்ங்கு வெண்பிறைசூ டீசனடி யார்க்குக்
கலங்ங்கு நெஞ்சமிலை காண்


இங்கு


ஒற்றளபெடைக்கான
விளக்கம் பெற


உதாரணமாக
எடுத்துக்கொள்வது
ஒரு
வெண்பா
என்பதால்


முதலில் நாம்
அறியவேண்டியவை

வெண்பாவிற்கான
சீர், தளை
மற்றும் ஓசை


வெண்பாவிற்கான
சீர்

ஈரசைச் சீர்களான
மாச்சீரையும்
விளச்சீரையும்
பெற்று வரும்

மூவசைச் சீர்களில்
காய்ச்சீர்
மட்டுமே வரும்
கனிச்சீர் வராது


வெண்பாவிற்கான
தளை

வெண்டளை


அதன்
இரு வகை


இயற்சீர் வெண்டளை

மா முன் நிரை
விளம் முன் நேர்

வெண்சீர் வெண்டளை

காய் முன் நேர்


வெண்பாவிற்கான
ஓசை

செப்பலோசை

(வினாவுக்கு விடை
செப்புவதுபோல்
அமைந்திருப்பதால்
செப்பலோசை)


இதன்படி


உதாரணமாக
எடுத்துக்கொள்ளப்பட்ட
இக்குறள்


அளபெடுக்காத
நிலையில்


புளிமா   கூவிளங்காய்    கூவிளங்காய் தேமா
நிரைநேர் நேர்நிரைநேர்   நேர்நிரைநேர் நேர்நேர்
இலங்/கு  வெண்/பிறை/சூ  டீ/சன/டி    யார்க்/குக்

கலங்/கு  நெஞ்/சமி/லை காண்
நிரைநேர் நேர்நிரைநேர் நேர்
புளிமா   கூவிளங்காய்  நாள்


வெண்பாவிற்கான
சீர் மற்றும்
தளைகளைப் பெறாது
ஓசையில்
குறைவுபடுவதை
அறியலாம்

(வெண்பா
இலக்கணப்படி
மா முன் நிரை
வருதல் வேண்டும்
ஆனால்
மா முன் நேர்
வந்துள்ளது)


அதுவே


அளபெடுத்த
நிலையில்


கருவிளம்  கூவிளங்காய்   கூவிளங்காய் தேமா
நிரைநிரை நேர்நிரைநேர்  நேர்நிரைநேர் நேர்நேர்
இல/ங்ங்கு வெண்/பிறை/சூ டீ/சன/டி    யார்க்/குக்

கல/ங்ங்கு  நெஞ்/சமி/லை காண்
நிரைநிரை நேர்நிரைநேர்  நேர்
கருவிளம்  கூவிளங்காய்  மலர்


வெண்பாவிற்கான
சீர் மற்றும்
தளைகளைப் பெற்று
ஓசையை
நிறைவுசெய்வதை
அறியலாம்

(அளபெடுத்ததால்
மா முன் நேர்
என்பது
விளம் முன் நேர்
என மாறி
வெண்பா
இலக்கணத்தை
நிறைவு
செய்துள்ளது)

இவ்வாறு


செய்யுளில்
ஓசை
குறையும்போது

ங்ஞ்ண் ந்ம்ன் வ்ய்ல்ள்
என்னும்
பத்து மெய்யும் (10)

ஆய்தமும் (1)

அளபெடுத்து
ஓசையை
நிறைவு செய்வது

ஒற்றளபெடையாம்


நன்னூல்
சூத்திரம்-92


ஙஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே

ஙஞண நமன வயலள ஆய்தம்
அளவுஆம் குறில்இணை குறில்கீ ழ்இடைகடை
மிகலே அவற்றின் குறிஆம் வேறே

(செய்யுளில் ஓசை குறையும்போது
அவ்வோசையை நிறைக்க) ங்ஞ்ண்
ந்ம்ன் வ்ய்ல்ள் என்னும் பத்து மெய்யும்
ஆய்தமும் தத்தம் ஒலிக்கும் கால அளவில்
மிகுந்து ஒலிப்பது ஒற்றளபெடை ஆகும்.
(அது) குறிலிணைகீழ் குறிற்கீழ் சொல்லில்
இடை, கடை என நான்கிடத்தில்
அளபெடுக்கும். (அவ்வாறு) அளப்பெடுத்தமையை
அறிதற்கு அவற்றின்பின் அவ்வெழுத்தே
மற்றொரு முறை வருவது அடையாளமாம்.



நினைவு கூர்க:


நன்னூல்
சூத்திரம்-58


மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே

மொழிமுதல் காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது முதல்சார் புஎனஇரு வகைத்தே

மொழிக்கு முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே எழுத்து; அது முதல் சார்பு என
இரு வகையாம்


நன்னூல்
சூத்திரம்-59


உயிரு முடம்புமா முப்பது முதலே

உயிரு ம்உடம்பும்ஆம் முப்பது முதலே

உயிர் எழுத்து (பன்னிரண்டும்)
மெய் எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது எழுத்து முதலெழுத்தாம்


நன்னூல்
சூத்திரம்-60


உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்

உயிர்மெய் ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் துஆகும்

உயிர்மெய், ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை (உயிரளபு),
ஒற்றளபெடை (ஒற்றளபு),
குற்றியலிகரம், (அஃகிய இ)
குற்றியலுகரம் (அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம் (அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம் (அஃகிய ஔ),
மகரக்குறுக்கம் (அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம் (அஃகிய தனிநிலை)
ஆகிய பத்தும் சார்பெழுத்து ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-61


உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ்
உகர மாறா றைகான் மூன்றே
ஔகா னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப

உயிர்மெய் இரட்டுநூற் றுஎட்டுஉய ர்ஆய்தம்
எட்டுஉயி ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி முந்நூற் றுஎழுபா ன்என்ப

உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம் மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று; மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று அறுபத்தொன்பது என்பர்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu


தமிழ் இலக்கணம் சார்பெழுத்து ஒற்றளபெடை / ஒற்றளபு

Tamil Grammar Secondary Letter
Poetical Prolongation Of The Sound Of Consonants And Guttural



No comments:

Post a Comment