Wednesday, May 20, 2020

67) சார்பெழுத்தின் இடப்பிறப்பும் முயற்சிப்பிறப்பும்


சார்பெழுத்தின் இடப்பிறப்பும் முயற்சிப்பிறப்பும்

The Pronunciation Of Aytham And Of Secondary Letters

மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே

எழுத்து
(Letter)


அது

முதல் எழுத்து
சார்பு எழுத்து

என
இரு வகையாம்


உயிர் எழுத்து
மெய் எழுத்து

ஆகிய இரண்டும்
முதலெழுத்து


உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

ஆகிய பத்தும்
சார்பெழுத்து


இங்கு


முதலெழுத்துகளைச்
சார்ந்து
தோன்றுகின்ற

சார்பெழுத்தின்
இடப்பிறப்பும்
முயற்சிப்பிறப்பும்
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


ஒலி எழுத்திற்கு
வேண்டும்
காரணங்களில்
குறைவின்றி

நிறைந்த
உயிரினது
முயற்சியால்

உள்ளே நின்ற
காற்றானது
எழுப்ப

எழுகின்ற
செவிப்புலனாகும்
அணுக்கூட்டம்


(இடப் பிறப்பு)


மார்பு
கழுத்து
தலை
மூக்கு

ஆகிய
இடங்களைப்
பொருந்தி


(முயற்சிப் பிறப்பு)


உதடு
நாக்கு
பல்
அண்ணம்

ஆகியவற்றின்
முயற்சியால்


வெவ்வேறு
வகைப்பட்ட

எழுத்துகளுக்கான
ஓசைகள்
தோன்றுதல்

எழுத்துகளின்
பிறப்பாம்


இம்முறைமைப்படி


சார்பெழுத்துகளில்
ஒன்றான

ஆய்த எழுத்திற்கு
இடப்பிறப்பு

தலை


(ஆய்த எழுத்திற்கு)
முயற்சிப்பிறப்பு

வாயைத் திறத்தல்
(அங்காத்தல்)


ஆய்தம்
நீங்கலாகிய
மற்றைச்
சார்பெழுத்துகளுக்கு

இடப்பிறப்பும்
முயற்சிப்பிறப்பும்

தத்தம்
முதலெழுத்துகளை
ஒத்து
அமைவனவாம்



நன்னூல்
சூத்திரம்-74


நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே

நிறைஉயிர் முயற்சியி ன்உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரன் கண்ட ம்உச்சி
மூக்குஉற் றுஇதழ்நாப் பல்அணம் தொழிலின்
வெவ்வே றுஎழுத்துஒலி ஆய்வரல் பிறப்பே

(ஒலி எழுத்திற்கு வேண்டும் காரணங்களில்
குறைவின்றி) நிறைந்த உயிரினது
முயற்சியால் உள்ளே நின்ற உதானன் எனும்
காற்றானது எழுப்ப எழுகின்ற செவிப்புலனாகும்
அணுக்கூட்டம் மார்பு, கழுத்து, தலை, நாசி
ஆகிய இடங்களைப் பொருந்தி உதடு,
நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின்
முயற்சியால் வேவ்வேறு வகைப்பட்ட
எழுத்துகளுக்கான ஓசைகள் தோன்றுதல்
எழுத்துகளின் பிறப்பு ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-87


ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய

ஆய்தக் குஇடம்தலை அங்கா முயற்சி
சார்பெழுத் துஏனவும் தம்முத ல்அனைய

(சார்பெழுத்துகளில் ஒன்றான) ஆய்த
எழுத்திற்கு இடப்பிறப்பு தலை முயற்சிப்பிறப்பு
வாயைத் திறத்தல் (அங்காத்தல்); (ஆய்தம்
நீங்கலாகிய) மற்றைச் சார்பெழுத்துகளுக்கு
(இடப்பிறப்பும் முயற்சிப்பிறப்பும்) தத்தம்
முதலெழுத்துகளை ஒப்பனவாம்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment