மொழிக்கு
முதற்காரணமான
அணுத்திரள்
ஒலியே
எழுத்து
(Letter)
அது
முதல் எழுத்து
(Primary Letter)
சார்பு எழுத்து
(Secondary Letter)
என
இரு வகையாம்
உயிர் எழுத்து
(Vowel)
மெய் எழுத்து
(Consonant)
ஆகிய இரண்டும்
முதலெழுத்து
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
ஆகிய பத்தும்
சார்பெழுத்து
அச்சார்பு
எழுத்துகளில்
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
நீட்டித்து ஒலிப்பதால்
தோன்றும்
அளபெடைகள்
இரண்டு
1)
உயிரளபெடை
2)
ஒற்றளபெடை
எழுத்தின்
ஒலிக்கும் கால அளவை
குறைத்து ஒலிப்பதால்
தோன்றும்
குறுக்கங்கள்
ஆறு
1)
குற்றியலிகரம்
2)
குற்றியலுகரம்
3)
ஐகாரக்குறுக்கம்
4)
ஔகாரக்குறுக்கம்
5)
மகரக்குறுக்கம்
6)
ஆய்தக்குறுக்கம்
இங்கு
குற்றியலுகரம்
குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
(தனி) நெடில்
ஏழும் (7)
ஆய்தம்
ஒன்றும் (1)
மொழிக்கு
இடையிலும்
இறுதியிலும்
வராத
ஔகாரம் (ஔ)
நீங்கிய
உயிர்
பதினொன்றும் (11)
வல்லெழுத்து
ஆறும் (6)
மெல்லெழுத்து
ஆறும் (6)
வல்லெழுத்துகளோடு
தொடராத
வகரம் நீங்கிய
இடையெழுத்து
ஐந்தும் (5)
ஆகிய
முப்பத்தாறனுள் (36)
ஒன்றால்
ஈற்றுக்கு
அயலெழுத்தாகத்
தொடரப்பட்ட
சொல்லின்
இறுதியில்
வல்லெழுத்துகளுள்
(க், ச், ட், த், ப்,
ற்)
யாதாயினும்
ஒன்றன்மேல்
ஏறிவரும்
உகரமானது
தன்னுடைய
ஒலிக்கும் கால அளவில்
குறைந்து (குறுகி)
ஒலிப்பது
குற்றியலுகரம்
இங்கே
இறுதியெழுத்திற்கு
அயலெழுத்தாகச்
சொன்ன
தனி நெடில்
ஒழிந்த
ஐந்தெழுத்தும்
அல்லாமல்
பிற எழுத்துகளும்
மேலே
தொடர்ந்து
வரவும் பெறும்
அது
(குற்றியலுகரம்)
ஈற்றெழுத்து
அயலெழுத்தை
நோக்கி
ஆறு வகை
ஒன்று
நெடிற்றொடர்க்
குற்றியலுகரம்
(உ-ம்)
காகு, காசு, காடு, காது,
காபு, காறு
இரண்டு
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
(உ-ம்)
எஃகு, கஃசு, கஃடு,
இருபஃது, அஃபு, சுஃறு
மூன்று
உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம்
(உ-ம்)
வரகு, பலாசு, முருடு,
எருது, துரபு, கயிறு
நான்கு
வன்றொடர்க்
குற்றியலுகரம்
(உ-ம்)
சுக்கு, கச்சு, கட்டு,
கத்து, கப்பு, கற்று
ஐந்து
மென்றொடர்க்
குற்றியலுகரம்
(உ-ம்)
கங்கு, பஞ்சு, வண்டு,
பந்து, அம்பு, கன்று
ஆறு
இடைத்தொடர்க்
குற்றியலுகரம்
(உ-ம்)
ஆய்கு, ஆய்சு, ஆய்து,
ஆய்பு
நன்னூல்
சூத்திரம்-94
நெடிலோ
டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி
யிறுதி வன்மை யூருகரம்
அஃகும்
பிறமேற் றொடரவும் பெறுமே
நெடிலோ
டுஆய்த ம்உயிர்வலி மெலிஇடைத்
தொடர்மொழி
இறுதி வன்மை ஊர்உகரம்
அஃகும்
பிறமேல் தொடரவும் பெறுமே
(தனி) நெடில்
ஏழும்(7), ஆய்தம் ஒன்றும்(1),
மொழிக்கு
இடையிலும் இறுதியிலும் வராத
ஔகாரம்
(ஔ) நீங்கிய உயிர் பதினொன்றும்(11),
வல்லெழுத்து ஆறும்(6), மெல்லெழுத்து ஆறும்(6),
வல்லெழுத்துகளோடு
தொடராத வகரம் நீங்கிய
இடையெழுத்து ஐந்தும்(5), ஆகிய முப்பத்தாறனுள்
(36)
ஒன்றால்; ஈற்றுக்கு அயலெழுத்தாகத்
தொடப்பட்ட
சொல்லின் இறுதியில்
வல்லெழுத்துகளுள்
யாதாயினும் ஒன்றன்மேல்
ஏறிவரும்
உகரமானது தன்னுடைய ஒலிக்கும்
கால அளவில் குறைந்து (குறுகி) ஒலிப்பது குற்றியலுகரம்.
இங்கே இறுதியெழுத்திற்கு
அயலெழுத்தாகச்
சொன்ன தனி
நெடில் ஒழிந்த ஐந்தெழுத்தும்
அல்லாமல்
பிற எழுத்துகளும் மேலே தொடர்ந்து
வரவும்
பெறும்.
நினைவு கூர்க:
நன்னூல்
சூத்திரம்-58
மொழிமுதற்
காரண மாமணுத் திரளொலி
எழுத்தது
முதல்சார் பெனவிரு வகைத்தே
மொழிமுதல்
காரண ம்ஆம்அணுத் திரள்ஒலி
எழுத்துஅது
முதல்சார் புஎனஇரு வகைத்தே
மொழிக்கு
முதற்காரணமான அணுத்திரள்
ஒலியே
எழுத்து; அது முதல் சார்பு என
இரு
வகையாம்
நன்னூல்
சூத்திரம்-59
உயிரு
முடம்புமா முப்பது முதலே
உயிரு ம்உடம்பும்ஆம்
முப்பது முதலே
உயிர்
எழுத்து (பன்னிரண்டும்)
மெய்
எழுத்து (பதினெட்டும்) ஆகிய
முப்பது
எழுத்து முதலெழுத்தாம்
நன்னூல்
சூத்திரம்-60
உயிர்மெய்
யாய்த முயிரள பொற்றள
பஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்துஞ் சார்பெழுத் தாகும்
உயிர்மெய்
ஆய்த ம்உயிர்அள புஒற்றுஅள
புஅஃகிய
இஉ ஐஔ மஃகான்
தனிநிலை
பத்தும் சார்பெழுத் துஆகும்
உயிர்மெய்,
ஆய்தம் (தனிநிலை),
உயிரளபெடை
(உயிரளபு),
ஒற்றளபெடை
(ஒற்றளபு),
குற்றியலிகரம்,
(அஃகிய இ)
குற்றியலுகரம்
(அஃகிய உ),
ஐகாரக்குறுக்கம்
(அஃகிய ஐ),
ஔகாரக்குறுக்கம்
(அஃகிய ஔ),
மகரக்குறுக்கம்
(அஃகிய மஃகான்),
ஆய்தக்குறுக்கம்
(அஃகிய தனிநிலை)
ஆகிய
பத்தும் சார்பெழுத்து ஆகும்.
நன்னூல்
சூத்திரம்-61
உயிர்மெய்
யிரட்டுநூற் றெட்டுய ராய்தம்
எட்டுயி
ரளபெழு மூன்றொற் றளபெடை
ஆறே
ழஃகு மிம்முப் பானேழ்
உகர
மாறா றைகான் மூன்றே
ஔகா
னொன்றே மஃகான் மூன்றே
ஆய்த
மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றொழி
முந்நூற் றெழுபா னென்ப
உயிர்மெய்
இரட்டுநூற் றுஎட்டுஉய
ர்ஆய்தம்
எட்டுஉயி
ர்அளபுஎழு மூன்றுஒற் றுஅளபெடை
ஆறுஏ ழ்அஃகு
ம்இம்முப் பான்ஏழ்
உகர ம்ஆறுஆ
றுஐகான் மூன்றே
ஔகா ன்ஒன்றே
மஃகான் மூன்றே
ஆய்த ம்இரண்டொடு
சார்பெழுத் துஉறுவிரி
ஒன்றுஒழி
முந்நூற் றுஎழுபா ன்என்ப
உயிர்மெய்
இருநூற்றுப்பதினாறு; குறுகாத
ஆய்தம்
எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று;
ஒற்றளபெடை
நாற்பத்திரண்டு; குற்றியலிகரம்
முப்பத்தேழு;
குற்றியலுகரம் முப்பத்தாறு;
ஐகாரக்குறுக்கம்
மூன்று; ஔகாரக்குறுக்கம்
ஒன்று;
மகரக்குறுக்கம் மூன்று; ஆய்தக்குறுக்கம்
இரண்டோடு
சார்பெழுத்தின் மிகுந்த விரி
ஒன்று
குறைந்த முந்நூற்றெழுபது அதாவது
முந்நூற்று
அறுபத்தொன்பது என்பர்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – சார்பெழுத்து – குற்றியலுகரம்
No comments:
Post a Comment