Friday, December 27, 2019

29) நூல் பெயர்க்காரணம்


மனிதனின்
உணர்வுகள்
கருத்துகள்
கற்பனைகள்
சிந்தனைகள்

ஒலி
வடிவிலோ
வரி
வடிவிலோ

இயல் இசை
நாடகம் என
மூவகையில்
அமைவது


இலக்கியம்


அது
(இலக்கியம்)


மனித வாழ்வை
மையமாகக்
கொண்டு

படித்திடவும்
கேட்டிடவும்
பார்த்திடவும்

செய்யுள் நடை
உரை நடை
ஆகிய இரு
மொழி நடைகளில்


கவிதை
மரபுக்கவிதை
புதுக்கவிதை
குறுங்கவிதை

காப்பியம்

கதை
சிறுகதை
நெடுங்கதை
நாடகம்

கட்டுரை
உரையாடல்
கடிதம்

என

பல்வேறு
இலக்கிய
வடிவங்களில்
படைக்கப்படுவது


அதனை
(இலக்கியத்தை)

அடுத்தவருடன்
பகிர்ந்திடவும்

அடுத்த
தலைமுறைக்கு
அதனைப்
பதிவுசெய்து
வைத்திடவும்

பழங்காலத்தில்

பனையோலைகளில்
எழுதியும்

நாளடைவில்

காகிதத்தாள்களில்
அச்சிட்டும்

அவற்றைத்
துளையிட்டு
நூலினால்
கோத்து
வைத்தனர்

பொத்துக் கோத்து
வைக்கப்பட்டதால்

அது

பொத்தகம் என்று
அழைக்கப்பட்டது


பொத்தகம் மருவி
புத்தகம் ஆனது


மேலும்


நூற்கும் கருவியை
கையால் இயக்க
பஞ்சு
நூலாகின்றது

மதியெனும் அறிவை
வாயால் இயக்க
சொற்கள்
புத்தகமாகின்றது


மரத்தின்
வளைந்த கோணலை
நேராக்குவது
எற்று நூல்
(இழைப்புளி)

மனிதனின்
மனக் கோணலை
நேராக்குவது
புத்தகம்


நூல்போல்
ஆக்கப்படுவதாலும்
எற்று நூல்போல்
செயற்படுவதாலும்

புத்தகமானது

நூல் எனும்
காரணப்பெயர்
பெற்றது


நன்னூல்
சூத்திரம்-24


பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு

பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழைஆகச்
செஞ்சொல் புலவனே சேயிழையா எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மைஇலா நூல்முடியும் ஆறு

பஞ்சு தன் சொல்லாக புத்தகம் நூலாக
செஞ்சொல் புலவனே (நூற்கும்) பெண்ணாக 
குறைவில்லாத கையே வாயாக கருவியே அறிவாக 
குற்றமில்லாத நூல் உருவாகும் வழி ஆகும்.


நன்னூல்
சூத்திரம்-25


உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லதேபோன் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு

உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளம்முருக்கிப் பொல்லா மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு

மரத்தின் உருண்டு திரண்ட வளைந்த 
கோணலை சரிசெய்து நேராக்குவதும்
மனிதனின் மனதில் ஞானத்தைப் பெருக்கி  
அஞ்ஞானத்தால் உண்டான மனக்கோணலை 
தீர்ப்பதும் நூலின் (எற்று நூல்/நூல்) சிறப்பு



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நூல் பெயர்க்காரணம்

Thamizh ilakkanam nool peyarkaaranam

Tamil Grammar The Name Cause Of The Word “Book”




No comments:

Post a Comment