Friday, December 27, 2019

19) நூலின் இயல்பு


நூலின் இயல்பு

மனிதன்

தன்னுடைய
எண்ணம்
கருத்து
சிந்தனை
ஆகியவற்றை

எழுத்து உருவில்
காட்டும்
ஒரு கருவி

நூல்


அது
(அந்த நூல்)

எல்லோராலும்
சிறந்தது
எனக் கருதப்பட

தனக்கென
சில
தனித்தன்மைகள்
பெற்றிருக்க
வேண்டும்


இங்கு


அந்த
தனித்தன்மைகள்
குறித்து

நூலின் இயல்பு
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்

நூலின்
இயல்புகள்


ஒன்று


ஓர்/இரு
பாயிரம்
உடையது


இரண்டு


மூவகை
நூல்களில்
ஒன்றாய்
அமைவது


மூன்று


நாற்பொருள்
பயன்
நல்குவது


நான்கு


எழுவகை
கொள்கைகள்
தழுவியது


ஐந்து


பத்து
குற்றங்கள்
இல்லாமல்
இருப்பது


ஆறு


பத்து
அழகுகள்
பொருந்தி
இருப்பது


ஏழு


முப்பத்திரண்டு  
உத்திகள்
கொண்டு
விளங்குவது


எட்டு


ஓத்து (இயல்)
படலம் (அதிகாரம்)
என்னும்
உறுப்புகள்
உடையது


ஒன்பது


சூத்திரம்
காண்டிகை
விருத்தி
ஆகிய
வேறுபட்ட
நடைகளைப்
பெறுவது


இந்த
இயல்புகளே

ஒரு சிறந்த
நூலுக்கான
அடையாளங்கள்


நன்னூல்
சூத்திரம்-4


நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
யையிரு குற்றமு மகற்றியும் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படல
மென்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே

நூலின் இயல்பே நுவலின் ஓர்இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றுஆய்
நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐஇரு குற்றமும் அகற்றிஅம் மாட்சியோடு
எண்நான்கு உத்தியின் ஓத்துப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்பநடை பெறுமே

நூலின் இயல்பைச் சொல்லின், (நூல்) 
ஓர்இரு பாயிரம் அமைந்து மூவகை நூல்களில் 
ஒன்றாக நான்கு பொருள் பயனோடு 
ஏழு வகை கொள்கைகளைத் தழுவிப் பத்து 
குற்றங்கள் இல்லாமல் பத்து அழகோடு 
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு இயல் 
அதிகாரம் என்னும் உறுப்புகளில் சூத்திரம் 
காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment