Friday, December 27, 2019

14) மிகச் சிறந்த தமிழ் இலக்கண நூல்கள்


மன்னர்களாலும்
புலவர்களாலும்
சங்கங்கள்
அமைத்து

போற்றி
வளர்க்கப்பட்டு

சங்கத்தமிழ்
என
வரலாறாய்
வாழ்வது

தமிழ் மொழி


அதனை
(தமிழ் மொழியை)

கசடற
கற்பதற்கு
இன்றியமையாதது

இலக்கணம்


அது
(இலக்கணம்)


தமிழ் மொழியில்

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்

என
ஐந்து வகைப்படும்


அவற்றைத்
(ஐவகை இலக்கணங்களைத்)

தொகுத்தும்
தனிதனியே விளக்கியும்

எண்ணற்ற
இலக்கண நூல்கள்
தமிழ் மொழியில்
இருந்தாலும்


அவற்றுள்


மிகச் சிறந்ததாகக்
கருதப்பட்டு

பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும்

பாட நுல்களாய்க்
கற்கப்படுகின்ற

இலக்கண நூல்கள்
சிலவற்றை

இங்கே
அறிந்துக் கொள்வோம்


எழுத்து சொல் தொடர்
குறித்த
தெளிவினைக்
கொடுத்திடும்

எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
கற்றிட

பயன்படும்
ஓர் இலக்கண நூல்


பவணந்தி முனிவர்
இயற்றிய
நன்னூல்


மனித
வாழ்வியலை
விளக்கிடும்

பொருள் இலக்கணத்தின்

ஒரு பிரிவான

அகப்பொருள் இலக்கணம்
கற்றிட

பயன்படும்
ஓர் இலக்கண நூல்


நாற்கவிராச நம்பி
இயற்றிய
நம்பி அகப்பொருள்


மற்றொரு பிரிவான

புறப்பொருள் இலக்கணம்
கற்றிட

பயன்படும்
ஓர் இலக்கண நூல்


ஐயனாரிதனார்
இயற்றிய
புறப்பொருள் வெண்பாமாலை


செய்யுள்
வகைகளைச்
சொல்லிடும்

யாப்பு இலக்கணம்
கற்றிட

பயன்படும்
இலக்கண நூல்கள்


அமுதசாகரர்
இயற்றிய
யாப்பருங்கலம்
மற்றும்
யாப்பருங்கலக் காரிகை


செய்யுளில்
அமைந்து கிடக்கும்
சொல்லழகையும்
பொருளழகையும்
காட்டிடும்

அணி இலக்கணம்
கற்றிட

பயன்படும்
ஓர் இலக்கண நூல்


தண்டி
இயற்றிய
தண்டியலங்காரம்


இவற்றுடன்


மேலும்
நாம் கற்கவேண்டிய
மிகச் சிறந்த
இலக்கண நூல்

நம்மிடையே
கிடைக்கப்பெறும்
மிகவும்
பழமையான

இலக்கிய வடிவிலான
ஓர்
இலக்கண நூலாகக்
கருதப்படும்


தொல்காப்பியர்
இயற்றிய
தொல்காப்பியம்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் மிகச் சிறந்த தமிழ் இலக்கண நூல்கள்

Tamil Grammar Best Books for Tamil Grammar





No comments:

Post a Comment