Friday, December 27, 2019

5) உலகச் செம்மொழிகள்


காலத்தால்
தொன்மையும்

தனக்கென்று ஒரு
தனித்தன்மையும்

பேச்சு மற்றும்
எழுத்து மொழிகளில்

இலக்கணச் சிறப்பும்
இலக்கிய வளமும்
பண்பாட்டு மரபும்
கொண்ட மொழி

செம்மொழி
(Classical Language)


அது
(செம்மொழி)

பரிதிமாற் கலைஞர்
கூற்றுப்படி

திருந்திய பண்பும்
சீர்ந்த நாகரிகமும்
பொருந்தியதொரு
தூய மொழி


அதுமட்டுமல்லாது


கருத்துப்
பொருட்களாய்

எண்ணற்ற
இலக்கியப்
படைப்புகளையும்

காட்சிப்
பொருட்களாய்

கட்டிட கலையிலும்
சிற்ப கலையிலும்
கணக்கற்ற
கலைப்
படைப்புகளையும்

தன்னகத்தே கொண்ட
உயர்
சிந்தனை மொழி


இங்கு நாம்


உலகச்
செம்மொழிகள்

என்ற தலைப்பில்

நீண்ட
வரலாற்றுப்
பின்புலமும்
கலைத்திறனும்
கொண்ட

உலகச்
செம்மொழிகளைப்
பற்றித்
தெரிந்துக்கொள்வோம்


Indo - European
Language Family

இந்தோ - ஐரோப்பிய
மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்த மொழிகளில்
செம்மொழிகளாய்
கருதப்படுவன

கிரேக்க மொழி
Greek Language
(A Language of Greece)

சமஸ்கிருத மொழி
Sanskrit Language
(A Language of India)

இலத்தின் மொழி
Latin Language
(A Language of Vatican State)

பாரசீக மொழி
Persian Language
(A Language of Iran)


Afro - Asiatic
Language Family

ஆபிரிக்க ஆசிய
மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்த
செமிடிக் (Semitic) மொழிகளில்
செம்மொழிகளாய்
கருதப்படுவன

அரபு மொழி
Arabic Language
(A Language of Saudi Arabia)

ஹீப்ரு (எபிரேய) மொழி
Hebrew Language
(A Language of Israel)


Sino Tibetan
Language Family

சீனோ திபெத்திய
மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்த மொழிகளில்
செம்மொழியாய்
கருதப்படுவது

சீன மொழி
Chinese Language
(A Language of China)


Dravidan
Language Family

திராவிட
மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்த மொழிகளில்
செம்மொழியாய்
கருதப்படுவது

தமிழ் மொழி
Tamil Language
(A Language of India)



- கவிஞர் பொன். இராஜன் பாபு

- Author P. Rajan Babu


உலகச் செம்மொழிகள்

The Classical Languages of the World




No comments:

Post a Comment