Friday, December 27, 2019

31) ஆசிரியர் இயல்பு-2


ஆசிரியர் இயல்பு 
(நிலம்  மலை  நிறைகோல் - மலர்)

The Qualities Of The Teacher 
(Earth  Mountain  Balance - Flower)

குடிப்பிறப்பு
அருளுடைமை
கடவுள் பக்தி
ஆகியவற்றில்
உயர் சிறப்பும்

பல
கலைகளையும்
கற்று
தேர்ந்த அறிவும்

தாம்
கற்றவற்றைப்
பிறருக்கு
எடுத்துரைக்கும்
சொல் வன்மையும்

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமையும்

உலகியல் அறிவும்

உயர்ந்த குணமும்

தன்னுடைய
இயல்புகளாகப்
பெற்றவரே

நல்ல

நூல் ஆசிரியர்
(நூலாசிரியர்)

உரை ஆசிரியர்
(உரையாசிரியர்)


இங்கு
ஆசிரியரின்
இயல்புகளில்
ஒன்றான

நிலம்
மலை
தராசு
மலர்
ஆகியவற்றிற்கு
நிகரான பெருமை

என்பது
குறித்து

சற்று
விளக்கமாக
அறிவோம்


காணுதற்கு அரிய
பெருமையும்

எதனையும் தாங்கும்
வலிமையும்

குற்றங்களைப் பொறுக்கும்
பொறுமையும்

பருவமுயற்சிக்குத் தக்க
பலனும்

நிலத்தின் / ஆசிரியரின்
மாண்பு


அளப்பதற்கு முடியாத
அளவும் பொருளும்

அசைக்க முடியாத
தன்மையும் உருவமும்

வறட்சியிலும்
வளம்தரும் வள்ளன்மையும்

மலையின் / ஆசிரியரின்
மாண்பு


சந்தேகம் நீங்கும்படி
பொருளை உணர்த்தலும்

உண்மைக்காக
நடுநிலை நிற்றலும்

தராசின் / ஆசிரியரின்
மாண்பு


நற்செய்கைக்கு
மிகவும் அவசியமும்

யாவரும் மகிழ்ந்து
ஏற்கும் மென்மையும்

குறித்த பொழுதில்
முகம் மலர்ச்சியும்

மலரின் / ஆசிரியரின்
மாண்பு


  
நன்னூல்
சூத்திரம்-27


தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே

தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவின் பயத்தலும்
மருவிய நல்நிலம் மாண்பு ஆகும்மே

காணுதற்கு அரிய பெருமையும் வலிமையும்
பொறுமையும் பருவ முயற்சிக்கு ஏற்ற
அளவில் பயனும் நல்ல நிலத்தின் மாண்பு
ஆகுமே.



நன்னூல்
சூத்திரம்-28


அளக்க லாகா வளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே

அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே

அளப்பதற்கு முடியாத அளவும் பொருளும்
அசைக்க முடியாத தன்மையும் உருவமும்
வறட்சியிலும் வளம் தரும் வள்ளன்மையும்
மலைக்கான மாண்பே.


நன்னூல்
சூத்திரம்-29


ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே

ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே

சந்தேகம் நீங்கும்படி பொருளை
உணர்த்துதலும் உண்மைக்காக நடுநிலை
நிற்றலும் தராசிற்கான மாண்பே


நன்னூல்
சூத்திரம்-30


மங்கல மாகி யின்றி யமையா
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் 
பொழுதின் முகமலர் வுடையது பூவே

மங்கலம் ஆகியின்றி யமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் 
பொழுதின் முகமலர் உடையது பூவே

நற்செய்கைக்கு மிகவும் அவசியமும்
யாவரும் மகிழ்ந்து ஏற்கும் மென்மையும்
குறித்த பொழுதில் முகம் மலர்ச்சியும்
உடையது பூவின் மாண்பே.




🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment