Friday, December 27, 2019

26) இயல் அதிகாரம்


இயல் அதிகாரம்

Section and Chapter

ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில் 
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

ஓத்து (இயல்)
படலம் (அதிகாரம்)
என்னும்
உறுப்புகள் உடையது

என்பது
குறித்து

இயல் அதிகாரம்
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்


இங்கு


ஓத்து (இயல்)
என்பது

ஒரே விதமான
மணிகளை
வரிசைப்பட
வைப்பது போல
ஓர் இனமான
பொருள்களை
ஒரு வழிப்பட
சொல்வது


படலம் (அதிகாரம்)
என்பது

ஓர் இனமாய்
இல்லாது
கலந்த பொருள்களால்
பொதுச் சொற்கள்
தொடர்ந்து வருவது



நன்னூல்
சூத்திரம்-16



நேரின மணியை நிரல்பட வைத்தாங்
கோரினப் பொருளை யொருவழி வைப்ப
தோத்தனெ மொழிப வுயர்மொழிப் புலவர்

நேர்இன மணியை நிரல்பட வைத்துஆங்கு
ஓர்இனப் பொருளை ஒருவழி வைப்பது
ஓத்துஎன மொழிப உயர்மொழிப் புலவர்

ஓர் இனமான மணிகளை வரிசைப்பட
வைப்பதுப்போல ஓர் இனமான
பொருள்களை ஒரு வழிப்பட சொல்வது
இயல் என்று சொல்வர் உயர்ந்த
மொழியியல் புலவர்.


நன்னூல்
சூத்திரம்-17


ஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரி னதுபடல மாகும்

ஒருநெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்

ஓர் இனமாய் இல்லாது கலந்த
பொருள்களோடு பொதுச் சொற்கள் 
தொடர்ந்து வருமாயின் அது அதிகாரம் ஆகும்.



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment