Friday, December 27, 2019

10) கசடறக் கற்க இலக்கணம்


ஆண்டவன்
படைப்பில்

ஆறறிவு
அதிசயம்

மனிதன்


அவனது
வாழ்வில்

ஓர்
இன்றியமையாத்
தேவை

மொழி
Language


அது
(மொழி)

அவனது

தகவல்
பரிமாற்றத்திற்கான
ஊடகம்

அனுபவப்
பகிர்வுக்கான
அடிப்படை

சிந்தனைத்
திறனுக்கான
ஊற்று

கருத்துப்
பதிவிற்கான
கருவி

ஆன்மா
பயணிக்கும்
பாதை


அதன்
(மொழியின்)

இரு
விழிகளாய்
விளங்குவது

ஒன்று

இலக்கணம்
Grammar

மற்றொன்று

இலக்கியம்
Literature


மொழியைக்
கசடற
கற்க
அடித்தளம்

இலக்கணம்


மொழியில்
படைக்கப்பட்ட
கருத்துக்
கருவூலம்

இலக்கியம்


இங்கு

மொழியைக்
கசடறக்
கற்பதற்கு

அடித்தளமாய்
அமையும்

இலக்கணத்தின்
அவசியம்
குறித்து

சற்று
விரிவாக
அறிவோம்


மொழியை
மொழியால்
விளக்குகின்ற
ஓர்
அரிய கலை

இலக்கணம்


அது

மொழியின்
அமைப்பையும்
பயன்பாட்டு
விதிகளையும்
எளிமையாய்
விளக்குவது

மொழிக்கு
அழகை
மட்டுமல்ல
சிறப்பையும்
கொடுப்பது

மொழியைப்
பிழையின்றிப்
பேசவும்
எழுதவும்
துணையாய்
அமைவது

இதனை
நன்கு
உணர்ந்தாலே

ஒவ்வொருவருக்கும்
இலக்கணத்தின்
அவசியம்
நன்கு விளங்கும்

இலக்கணத்தைக்
கற்க வேண்டும்
என்ற
எண்ணம் பிறக்கும்

அந்த
எண்ணமே
ஆவலாய் மாறி

மொழிக்
கற்றலுக்கும்
கற்பித்தலுக்கும்
படைப்பாற்றலுக்கும்

ஓர்
அடித்தளமாய்
அமையும்



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் கசடற கற்க இலக்கணம்

Tamil Grammar Learn Language Properly Through Grammar




No comments:

Post a Comment