ஓர்இரு
பாயிரம் அமைந்து
மூவகை
நூல்களில் ஒன்றாக
நான்கு
பொருள் பயனோடு
ஏழு
வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக்
குற்றங்கள் இல்லாமல்
பத்து
அழகோடு
முப்பத்திரண்டு
உத்தியைக் கொண்டு
இயல்
அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட
நடைகளைப் பெறும்
என்பது
நூலின் இயல்புகள்
இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான
பத்துக்
குற்றங்கள்
இல்லாமல்
இருப்பது
என்பது
குறித்து
பத்துக் குற்றம்
என்ற
தலைப்பின் கீழ்
சற்று
விளக்கமாக
அறிவோம்
இங்கு
குற்றம்
என்பது
ஆசிரியர்
தனது நூலில்
இடம் பெறாது
தவிர்க்க
வேண்டியவை
அது
(குற்றங்கள்)
பல இருப்பினும்
தலைமை நோக்கி
குற்றம் பத்து
என்பது
நூல் வழக்கு
பத்துக்
குற்றங்கள்
ஒன்று
குறைவுபடச்
சொல்வது
இரண்டு
அதிகப்படச்
சொல்வது
மூன்று
சொன்னதையே
சொல்வது
நான்கு
முன்னுக்குப்பின்
முரண்படச்
சொல்வது
ஐந்து
குற்றமுடைய
(கொச்சை)
சொற்களைச்
சேர்ப்பது
ஆறு
சந்தேகிக்க
வைப்பது
ஏழு
பொருட்செறிவு
இல்லாத
சொற்களைச்
சேர்ப்பது
எட்டு
வேறொன்றை
விரித்துச்
சொல்வது
ஒன்பது
போகப்போக
குறைத்து
முடிவது
பத்து
சொற்களிருந்தும்
பயனில்லாது
போவது
நன்னூல்
சூத்திரம்-12
குன்றக்
கூறன் மிகைபடக் கூறல்
கூறியது
கூறன் மாறுகொளக் கூறல்
வèஉச்சொற்
புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத்
தொடுத்தன் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந்
திறுத னின்றுபய னின்மை
என்றிவை
யீரைங் குற்ற நூற்கே
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வèஉச்சொல் புணர்த்தல் மயங்க
வைத்தல்
வெற்றுஎனத் தொடுத்தல் மற்றுஒன்று
விரித்தல்
சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன்
இன்மை
என்றுஇவை ஈர்ஐம் குற்றம்
நூற்கே
குறைவுபடச்
சொல்லல், அதிகப்படச்
சொல்லல்,
சொன்னதையே சொல்லல்,
முன்னுக்குப்பின்
முரண்படச் சொல்லல்,
குற்றமுடைய
சொற்களைச் சேர்த்தல்,
சந்தேகிக்க
வைத்தல், பொருட்செறிவு
இல்லாத
சொற்களைச் சேர்த்தல்,
வேறொன்றை
விரித்துச் சொல்லல்,
போகப்போக
குறைத்து முடித்தல்,
சொற்களிருந்தும்
பயனில்லாது போதல்
ஆகிய
இவை நூலுக்குப் பத்துக் குற்றங்கள்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – பத்துக் குற்றம்
No comments:
Post a Comment