Friday, December 27, 2019

3) மொழிகளின் வகைகளும் வரையறைகளும்


மனிதன்
தன் கருத்துக்களைப்
பிறரும்
பிறர் கருத்துக்களைத்
தானும்

அறிந்துக் கொள்ள
புரிந்துக் கொள்ள

ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்

உருவாக்கிக் கொண்ட
ஊடகம்

மொழி
Language


இங்கு

மொழியின்
தன்மை, இயல்பு
மற்றும்
பயன்பாட்டின்
அடிப்படையில்

அதன்
வகைகளையும்
வரையறைகளையும்
விளக்கமாகப்
பார்ப்போம்


பேசவும் எழுதவும்
அறியாத
ஆதிகால மனிதன்
தனது கருத்துப்
பரிமாற்றத்திற்கு

சப்தங்களாய்
உடலசைவுகளாய்
பயன்படுத்திய மொழி

சைகை மொழி
Gesture Language


மனிதன்
தனது கருத்துப்
பரிமாற்றத்திற்கு

காற்று ஊடகத்தில்
ஒலி வடிவில்
பயன்படுத்தும் மொழி

பேச்சு மொழி
Spoken Language


மனிதன்
தனது கருத்துப்
பரிமாற்றத்திற்கு

எழுது பரப்புகளில்
வரி வடிவில்
பயன்படுத்தும் மொழி

எழுத்து மொழி
Written Language


பல மொழிகள்
உண்டாவதற்கு
காரணமாகவும்
அடிப்படையாகவும்
அமைந்த மொழி

மூல மொழி
Source Language


பேச்சிலும் எழுத்திலும்
தனக்கென்று ஒரு
தனித்தன்மை வாய்ந்த
தனிநபர் மொழி

தனி மொழி
Idiolect Language


இரு வேறு மொழிகள்
தம்முள் கலந்து
இரு மொழியினர்க்கும்
புரியும் வகையில்
பேசப்பட்டுவரும்
புதியதொரு மொழி

பொது மொழி
Common Language


துறை அல்லது
தொழில் சார்ந்த
திறனாளர்களால்
மட்டுமே
புரிந்துகொள்ள
முடிந்த மொழி

சிறப்பு மொழி
Special Language


ஒரு குழுவினர்
தங்களுக்கு மட்டுமே
புரியும் வகையில்
உருவாக்கிக் கொள்ளும்
செயற்கை மொழி

குறு மொழி
Secret Language


விதிமுறைகள்
கட்டுப்பாடுகள்
சட்டத்திட்டங்கள்
தளைகள்
எதிலும் சிக்காத
தன்னியல்பான மொழி

கொச்சை மொழி
Slang


இன்றும்
மக்களால்
பேசப்பட்டுவரும்
மொழி
வழக்கு மொழி
Extant Language


இன்று
பேசுபவர்கள்
எவரும்
இல்லாத மொழி

வழக்காறொழிந்த மொழி
Extinct Language


முதன்மை மொழியாக
எவராலும்
பேசப்படாத மொழி

இறந்த மொழி
Dead Language


பயன்பாட்டில் இருந்து
வழக்கிழந்து
அழிந்து போகும்
நிலையிலுள்ள மொழி

அருகிய மொழி
Endangered Language


ஒரு மொழியை
அடிப்படையாகக்
கொண்டு
ஒலி அமைப்பிலும்
இலக்கண அமைப்பிலும்
ஏற்படும் மாற்றங்களால்
தோன்றிடும் மொழி

கிளை மொழி
Dialect


சிறு பிராயத்தில்
கற்றுக்கொண்டதும்
இன்றளவும்
பேசப்பட்டுவரும் மொழி

முதல் (முதன்மை) மொழி
First (Primary) Language


தாய்மொழிக்கு அல்லது
முதல் மொழிக்கு மேல்
ஒருவரால்
அதிகமாக கற்கப்படும்
ஏதாவது ஒரு மொழி

இரண்டாவது மொழி
Second Language


தாய் தந்தை வழி
அவரது குழந்தை
கற்றுக்கொள்ளும்
முதல் மொழி

தாய் மொழி
Mother Tongue/Language


ஒருவரின்
தாய்மொழி அல்லாத
பிற மொழி

அயல் (அந்நிய) மொழி
Foreign Language


நாம்
பேசும் பொழுதோ
கேட்கும் பொழுதோ
நம்
உடல் அசைவுகளால்
வெளிபடுத்தும் மொழி

உடல் மொழி
Body Language


ஒரு அரசாங்கம்
பயன்படுத்தும்
நாட்டின்
பெருபான்மை
மக்களால்
பேசப்படும் மொழி
ஆட்சி (அலுவல்) மொழி
Official Language


காலத்தால் முற்பட்ட
மிகவும்
பழமையான மொழி

தொன்(மை) மொழி
Antique Language


காலத்தால்
தொன்மையும்

தனக்கென்று ஒரு
தனித்தன்மையும்

பேச்சு மற்றும்
எழுத்து மொழிகளில்

இலக்கணச் சிறப்பும்
இலக்கிய வளமும்
பண்பாட்டு மரபும்
கொண்ட மொழி

செம்மொழி
Classical Language



- கவிஞர் பொன். இராஜன் பாபு

- Author P. Rajan Babu




No comments:

Post a Comment