எத்னோலாக்
(Ethnologue)
என்ற
உலக மொழிகள்
குறித்த
மொழி ஆய்வு
இணையத் தளம்
தனது
மேம்படுத்தப்பட்ட
இருபதாம்
இணையத் தள
பதிப்பில்
இன்றும்
உலகில்
வாழும் மொழிகளாக
உள்ள
7097 மொழிகளையும்
அந்த
மொழிகள் குறித்த
பயனுள்ள
தகவல்களையும்
பல்வேறு
தலைப்புகளின் கீழ்
பட்டியலிட்டு
பலரும் அறிந்திட
பாங்குற
படைத்துள்ளது
இங்கு நாம்
உலகில்
அதிக மக்களால்
பேசப்படும் மொழிகள்
என்ற தலைப்பில்
இந்த
இணையத் தளத்தின்
துணைக்கொண்டு
50 மில்லியனுக்கும்
அதிகமான மக்களால்
பேசப்பட்டுவரும்
23 மொழிகள் குறித்து
தெள்ளத்தெளிவாக
தெரிந்துக்கொள்வோம்.
1299 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
முதலிடத்தில்
சீன மொழி
அதில்
சீன வட்டார
வழக்கு மொழிகளைக்
கூட்டாகக் குறிக்கும்
மாண்டரின் மொழி
மட்டும்
909 மில்லியன் மக்களால்
பேசப்படுகிறது
442 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
2-ஆம் இடத்தில்
ஸ்பானிய மொழி
378 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
3-ஆம் இடத்தில்
ஆங்கில மொழி
315 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
4-ஆம் இடத்தில்
அரபு மொழி
260 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
5-ஆம் இடத்தில்
ஹிந்தி மொழி
243 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
6-ஆம் இடத்தில்
வங்காள மொழி
223 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
7-ஆம் இடத்தில்
போர்த்துகீசிய மொழி
154 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
8-ஆம் இடத்தில்
ரஷ்ய / உருசிய மொழி
128 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
9-ஆம் இடத்தில்
ஜப்பானிய மொழி
119 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
10-ஆம் இடத்தில்
லாஹண்டா மொழி
84.4 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
11-ஆம் இடத்தில்
ஜாவனீஷ் மொழி
78.5 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
12-ஆம் இடத்தில்
துருக்கிய மொழி
77.2 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
13-ஆம் இடத்தில்
கொரிய மொழி
76.8 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
14-ஆம் இடத்தில்
பிரெஞ்சு மொழி
76.0 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
15-ஆம் இடத்தில்
ஜெர்மன் மொழி
74.8 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
16-ஆம் இடத்தில்
தெலுங்கு மொழி
71.8 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
17-ஆம் இடத்தில்
மராத்திய மொழி
69.2 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
18-ஆம் இடத்தில்
உருது மொழி
68.0 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
19-ஆம் இடத்தில்
வியட்நாமிய மொழி
66.7 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
20-ஆம் இடத்தில்
தமிழ் மொழி
64.8 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
21-ஆம் இடத்தில்
இத்தாலிய மொழி
61.5 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
22-ஆம் இடத்தில்
பாரசீக மொழி
60.7 மில்லியன் மக்களால்
பேசப்பட்டு
23-ஆம் இடத்தில்
மலாய் மொழி
மேலும்
மொழிகள்
தொடர்பான
கூடுதல்
தகவல்களுக்கு
எத்னோலாக்
இணையத் தளம்
பார்க்கவும்.
-கவிஞர் பொன். இராஜன்
பாபு
No comments:
Post a Comment