Friday, December 27, 2019

7) அடிப்படை மொழித் திறன்கள்


அடிப்படை மொழித் திறன்கள்

The Four Basic Language Skills

மொழி

ஆரம்பத்தில்
மனிதனுக்கு

கருத்து
பரிமாற்றக்
கருவி

நாளடைவில்
அவனது

சிந்தனை
திறனுக்கான
ஊற்று


அம்மொழியைக்

கசடறக்
கற்பதற்கும்
கையாள்வதற்கும்
பயன்படும்
ஆற்றல்தான்

மொழித் திறன்


அது

கேட்டல் - Listening
படித்தல் - Reading

என
உட்கொள்
திறன்களாகவும்

பேசுதல் - Speaking
எழுதுதல் - Writing

என
வெளியிடு
திறன்களாகவும்

முறையே

கேட்டல் - Listening
பேசுதல் - Speaking
படித்தல் - Reading
எழுதுதல் - Writing

என்ற
வரிசையில்

இயற்கையாய்
அமைவது


இதில்

ஒலி
வடிவத்தின்
அடிப்படையில்
அமைவது

கேட்டல் - Listening
பேசுதல் - Speaking

வரி
வடிவத்தின்
அடிப்படையில்
அமைவது

படித்தல் - Reading
எழுதுதல் - Writing


இவ்
வரிசை முறை

(LSRW Skills)

தன்னுடைய
தாய்மொழியில்
மட்டுமே
அமைகின்ற

இயல்பான
மொழிக் கற்றல்
அமைப்பு முறை
என்பது

ஒவ்வொருவருக்கும்

சொல்லாமலே
விளங்கிடும்
ஒன்று


இந்த

நான்கு
திறன்களிலும்
நன்கு
தேர்ந்தவரே

மொழியில்
புலமையும்

அறிவில்
ஆற்றலும்

சிந்தையில்
தெளிவும்

நிரம்பப்
பெற்றவர்


இதை

ஒவ்வொருவரும்
நன்கு
உணர்ந்தால்தான்

தன்னுடைய
தாய்மொழியின்
தனிச்சிறப்பு

தெளிவாக
விளங்கும்

தானும்

தாய்மொழியைத்
திறம்பட
கற்க வேண்டும்
என்ற

நாட்டம்
பிறக்கும்


தாய்மொழியில்
புலமையே
அயல்மொழியை
விரைந்து கற்க

பாதை
அமைக்கும்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar




No comments:

Post a Comment