Friday, December 27, 2019

21) நாற்பொருட் பயன்


ஓர்இரு பாயிரம் அமைந்து
மூவகை நூல்களில் ஒன்றாக
நான்கு பொருள் பயனோடு
ஏழு வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக் குற்றங்கள் இல்லாமல்
பத்து அழகோடு
முப்பத்திரண்டு உத்தியைக் கொண்டு
இயல் அதிகாரம் என்னும் உறுப்புகளில் 
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய 
வேறுபட்ட நடைகளைப் பெறும்

என்பது
நூலின் இயல்புகள்


இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான

நாற்பொருள்
பயன்
நல்குவது

என்பது
குறித்து

நாற்பொருட் பயன்
என்ற
தலைப்பின் கீழ்

சற்று
விளக்கமாக
அறிவோம்


மனித
வாழ்க்கையின்

சிறந்த
வாழ்வியல்
முறை

அற வழியில்
பொருள் ஈட்டி
இன்பம் துய்த்து
வீடு அடைதல்

அச்சிறந்த
வாழ்வியல்
முறையில்
குறிப்பிடப்படும்

அறம்
பொருள்
இன்பம்
வீடு

ஆகிய
நாற்பொருட்களை
அடைவதே

நூலினால்
பெறப்படும்
பயனாகும்



நன்னூல்
சூத்திரம்-10


அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே

அறம்பொருள் இன்பம்வீடு அடைதல்நூல் பயனே

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் 
நான்கு பொருளையும் அடைவதே
நூலினால் பெறப்படும் பயனாகும்.



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் நாற்பொருட் பயன்

Tamil Grammar The Four Cardinal Blessings




No comments:

Post a Comment