Friday, December 27, 2019

13) பைந்தமிழ் இலக்கணம்


உலகில்

பல்லாயிரம்
மொழிகள்
பயன்பாட்டில்
இருந்தாலும்

அவற்றுள்

உயர்தனிச்
செம்மொழி

என்ற
பெருஞ்சிறப்பினைப்
பெற்றது

தமிழ் மொழி
Tamil Language


அது
(தமிழ் மொழி)

இயல் இசை நாடகம்
என

முத்தமிழாய்
விரிந்து

ஒவ்வொன்றுக்கும்
தனித்தனியே
இலக்கணத்தைக்
கொண்டது


இங்கு

நாம்

இயற்றமிழுக்கான
ஐந்து வகை
இலக்கணங்களைப்

பைந்தமிழ் இலக்கணம்
(ஐவகை இலக்கணம்)

என்ற தலைப்பில்
சற்று
விரிவாகப் பார்ப்போம்


மொழியின்
ஆக்கம் குறித்த
படிநிலைகள்


முதலாவது


மொழிக்கு
அடிப்படையாக
அமைந்த
ஒலிகளைக்
குறிக்கவும்
அந்த
ஒலிகளுக்குரிய
வரிவடிவத்தைக்
குறிக்கவும்
பயன்படுவது

எழுத்து
Letter


இரண்டாவது


ஓர்
எழுத்தாலோ
ஒன்றுக்கு
மேற்பட்ட
எழுத்துகளாலோ
ஆக்கப்பட்டு
ஒரு
பொருளைத் தரும்
அடிப்படை
மொழிக்கூறு

சொல்
Word


மூன்றாவது


சொற்கள்
ஒன்றுடன் ஒன்று
குறிப்பிட்ட
ஒழுங்கில் அமைந்து
பொருள் தரும்
முறையில்
தொடர்வது

தொடர்
Phrase


அதில்

கருத்து
முற்றுப்பெற்ற
சொற்றொடர்

வாக்கியம்
Sentence


இவற்றை
(எழுத்து சொல் தொடர்)

அடிப்படையாகக்
கொண்டு
அமைகின்ற
இரு
மொழி நடைகள்


ஒன்று


எடுத்துக்கொண்ட
கருத்து விளங்கச்
சுருக்கமாகச்
செய்யப்படும்
மொழி நடை

செய்யுள் நடை
Poetry


இரண்டு


கருத்தினைச்
சொல்வதற்கேற்ற
இயல்பான
எளிமையான
மொழி நடை

உரை நடை
Prose


இவ்விரு
மொழி நடைகளை

நாம்
புரிந்துக் கொள்ளவும்
அவற்றில்
புலமை பெற்றிடவும்

நாம்
அறிய வேண்டியது
ஐவகை இலக்கணம்


அவைகள்
முறையே


எழுத்து சொல் தொடர்
குறித்த
தெளிவினைக்
கொடுத்திடும்

எழுத்து இலக்கணம்
Orthography

சொல் இலக்கணம்
Etymology


மனித
வாழ்வியலை
விளக்கிடும்

பொருள் இலக்கணம்


செய்யுள்
வகைகளைச்
சொல்லிடும்

யாப்பு இலக்கணம்
Prosody


செய்யுளில்
அமைந்துக் கிடக்கும்
சொல்லழகையும்
பொருளழகையும்
காட்டிடும்

அணி இலக்கணம்
Rhetoric



-     கவிஞர் பொன். இராஜன் பாபு

-     Author P. Rajan Babu



தமிழ் இலக்கணம் பைந்தமிழ் இலக்கணம்

Tamil Grammar Five Divisions of Tamil Grammar




No comments:

Post a Comment