ஓர்இரு
பாயிரம் அமைந்து
மூவகை
நூல்களில் ஒன்றாக
நான்கு
பொருள் பயனோடு
ஏழு
வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக்
குற்றங்கள் இல்லாமல்
பத்து
அழகோடு
முப்பத்திரண்டு
உத்தியைக் கொண்டு
இயல்
அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட
நடைகளைப் பெறும்
என்பது
நூலின் இயல்புகள்
இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான
சூத்திரம்
காண்டிகை
விருத்தி
ஆகிய
வேறுபட்ட
நடைகளைப்
பெறுவது
என்பதில்
சூத்திரம்
என்பது குறித்து
சற்று
விளக்கமாக
அறிவோம்
இங்கு
சூத்திரம்
(நூற்பா – செய்யுள் – பாடல்)
என்பது
மிகப் பெரிய
கருத்தையும்
சில சொற்களில்
சுருக்கமாக
விளக்குவது
அதாவது
பெரிய உருவத்தையும்
தன்னுள் அடக்கி
காட்டிடும் கண்ணாடி
போன்று
பெரிய கருத்தையும்
சில சொற்களில்
சுருக்கமாகக் காட்டி
திண்மையும் நுண்மையும்
சிறந்ததாய் அமைவது
சூத்திரம்
இடையறாது
ஓடுகின்ற
ஆற்று
நீரோட்டம்
முன்னும்பின்னும்
பார்க்கின்ற
சிங்கத்தின்
பார்வை
இடைவிட்டுக்
குதிக்கின்ற
தவளையின்
பாய்ச்சல்
இரைகண்டு
வீழ்கின்ற
பருந்தின்
வீழ்ச்சி
போல்வன
சூத்திரத்தின்
தன்மைகள்
அது
(சூத்திரம்)
ஆறு
பிரிவுகளை
உடையது
அவைகள்
முறையே
பிண்டம்
தொகை
வகை
குறி
செய்கை
புறனடை
பலதிறப்
பொருள்களையும்
உள்ளடக்கி
பொதுப்பட வருவது
பிண்டம்
(பிண்டச் சூத்திரம்)
பலதிறப்
பொருள்களையும்
வேறுவேறாகத்
தொகுத்து சொல்வது
தொகை
(தொகைச் சூத்திரம்)
தொகுத்து
சொல்லப்பட்டவற்றை
வேறுவேறாக
வகுத்து சொல்வது
வகை
(வகைச் சூத்திரம்)
வகைபடுத்தி
சொல்லப்பட்டவற்றைத்
தனித்தனியே
குறிப்பிட்டு சொல்வது
குறி
(குறிச் சூத்திரம்)
தனித்தனியே
குறிப்பிட்டு
சொல்லப்பட்டவற்றின்
செய்கைகளைச் சொல்வது
செய்கை
(செய்கைச் சூத்திரம்)
மேற்குறிப்பிட்டவற்றை
ஏற்று
அவற்றிற்கு புறத்தே
அடையாய் நிற்பது
புறனடை
(புறனடைச் சூத்திரம்)
நன்னூல்
சூத்திரம்-18
சிவ்வகை
யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வ
னாடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப
நுட்பஞ் சிறந்தன சூத்திரம்
சில்வகை எழுத்தின் பல்வகைப்
பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்துஇனிது
விளக்கித்
திட்ப நுட்பம் சிறந்தன
சூத்திரம்
சிலவகை
எழுத்துகளாகிய சொற்களில்
பலவகைப்பட்ட
பொருள்களையும்
செம்மையான
ஆடியினைப் போல
அடக்கி
இனிதாகக் காட்டி திண்மையும்
நுண்மையும்
சிறந்ததாய் அமைவது சூத்திரம்
நன்னூல்
சூத்திரம்-19
ஆற்றொழுக்
கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப்
பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை
ஆற்றுஒழுக்கு அரிமா நோக்கம்
தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ் அன்னசூத்
திரநிலை
ஆற்று
நீரோட்டம், சிங்கத்தின் பார்வை
தவளையின்
பாய்ச்சல் பருந்தின் வீழ்ச்சி
போல்வன
சூத்திரத்தின் தன்மை
நன்னூல்
சூத்திரம்-20
பிண்டந்
தொகைவகை குறியே செய்கை
கொண்டியல்
புறனடைக் கூற்றன சூத்திரம்
பிண்டம் தொகைவகை குறியே செய்கை
கொண்டுஇயல் புறனடைக் கூற்றன
சூத்திரம்
பிண்டம்,
தொகை, வகை, குறி, செய்கை,
கொண்டு
இயல்பானதும் புறனடை எனும்
இயல்புக்கு
மாறானதும் ஆகிய (ஆறு)
பிரிவுகளை
உடையது சூத்திரம்.
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – சூத்திரம்
No comments:
Post a Comment