Friday, December 27, 2019

6) தாய்மொழி அயல்மொழி - ஒரு புரிதல்


தாய்மொழி அயல்மொழி - ஒரு புரிதல்

மனிதன்
தனது
கருத்துக்களை

அடுத்தவர்க்கும்
அடுத்த தலைமுறைக்கும்

பகிர்ந்திடவும்
பதிவு செய்திடவும்

ஒலி வடிவிலும்
வரி வடிவிலும்

ஊடகமாய்
உருவாக்கிக் கொண்டது

மொழி
Language


அது
(மொழி)

உலகம் முழுவதும்

இனத்திற்கேற்பவும்
இடத்திற்கேற்பவும்

பல்லாயிரமாய்
பல்கிபெருகி

பல்வேறு
மாற்றங்களும்
வளர்ச்சிகளும்
அடைந்து

குழந்தை முதல்
பெரியவர் வரை

பாமரர் முதல்
படித்தவர் வரை

அனைவராலும்

பேச்சு
மொழியாகவும்
எழுத்து
மொழியாகவும்

பயன்படுத்தப்பட்டு
வருகின்றது


அவற்றுள்

இன்று’
பேசுபவர்கள்
எவரும்
இல்லாமல்
வழக்காறொழிந்த
மொழிகளும்

முதன்மை
மொழியாக
எவராலும்
பேசப்படாத
இறந்த
மொழிகளும்
அடங்கும்


மேலும் சில

பயன்பாட்டில்
இருந்து
வழக்கிழந்து
அழிந்து போகும்
நிலையிலும்
உள்ளன


மொழிகளுக்கிடையே

மனிதன்

தனது
எண்ணங்களை
கருத்துக்களை
மட்டும்
பரிமாறிக்கொண்ட
வரையில்

கருத்து
வேறுபாடுகள்
எதுவும்
எழவில்லை


மனித
அறிவுக்கும்
சிந்தனைக்கும்

மொழி
அவசியம் என்ற
நிலை
ஏற்பட்ட பிறகே

உலக
மக்களிடையே
மாபெரும் குழப்பம்


தன்னுடைய
மற்றும்
தன்னுடைய
தலைமுறையின்

எதிர்கால
வாழ்க்கைக்கும்
ஏற்றமிகு
வாழ்க்கைக்கும்

அறிவு
வளர்ச்சிக்கும்
சிந்தனை
திறனுக்கும்

எம்மொழியைக்
கற்பது என்று

தாய் தந்தை வழி
அவரது குழந்தை
கற்றுக்கொள்ளும்
முதல் மொழியான

தாய் மொழியையா.....?

ஒருவரின்
தாய்மொழி அல்லாத
பிற மொழியான

அயல் மொழியையா.....?


இன்றைய
அறிவியல் மற்றும்
கணினி யுகத்தில்

ஒருவருக்கு
தாய்மொழி
அலுவல் மொழி
மற்றும்
தொடர்பு மொழி
தெரிந்திருந்தால்

உலகில் எங்கு
வேண்டுமானாலும்
அதனைத்
துணையாகக்
கொண்டு
வாழ்ந்திடலாம்


இதனைக்
கருத்தில் கொண்டே

மனித குல
மேம்பாட்டிற்காக
உழைக்கும்

பல நாடுகளின்
கூட்டமைப்பாக
செயல்படும்

ஐக்கிய நாடுகள்
சபை(US)யின்

முக்கிய துணை
நிறுவனங்களில்
ஒன்றான

ஐக்கிய நாடுகள்
கல்வி அறிவியல்
மற்றும் பண்பாட்டு
நிறுவனம் (UNESCO)

இன்றைய
காலகட்டத்தில்

மனிதனின்
அறிவு
வளர்ச்சிக்கும்
சிந்தனை
திறனுக்கும்

பன்மொழி கல்வி
அவசியம் என்றும்

ஆனால்.......

மொழி
கற்றலுக்கான
ஓர்
அடித்தளத்தை

தொடக்கக்
கல்வியாக
தாய்மொழியின்
வாயிலாகவே
தொடங்கி

படிப்படியாக
தேசிய மற்றும்
சர்வதேச
மொழிகளை

அயல்மொழிகளாக
கற்க
வேண்டும். என்றும்
வலியுறுத்தி
வருகின்றது


தாய்மொழியில்
கல்வி
கற்பித்துவரும்
நாடுகளே

கல்வியில்
அறிவியலில்
பொருளாதாரத்தில்

வளர்ச்சி பல
கண்டிருப்பது
கண்கூடு


மனிதர்களின்
சிந்தனையும்
கற்பனையும்
அவரவர்
தாய்மொழியில்தான்
உருவாகின்றன

என்று
எடுத்துரைகின்றார்

மகாத்மா
காந்தியடிகள்


தாய்மொழியைத்
திறம்பட
அறியாத எவரும்
அயல்மொழி
கற்பது அரிது

என்று
அழுத்தமாகவும்
ஆணித்தரமாகவும்
அறிவுறுத்துகிறார்

இலக்கிய மேதை
ஜார்ஜ் பெர்னாட் ஷா


உலகில் வாழும்
ஒவ்வொருவரும்

அவரவர்
தாய்மொழியை
கசடறக் கற்று
உயிரெனக்
காத்திடுவோம்

தாய்மொழி
துணையுடன்
அயல்மொழியை
புரிதலுடன்
கற்றிடுவோம்



🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் இலக்கணம்
Guru Vishnu – Tamil Grammar





No comments:

Post a Comment