ஓர்இரு
பாயிரம் அமைந்து
மூவகை
நூல்களில் ஒன்றாக
நான்கு
பொருள் பயனோடு
ஏழு
வகை கொள்கைகளைத் தழுவி
பத்துக்
குற்றங்கள் இல்லாமல்
பத்து
அழகோடு
முப்பத்திரண்டு
உத்தியைக் கொண்டு
இயல்
அதிகாரம் என்னும் உறுப்புகளில்
சூத்திரம்
காண்டிகை விருத்தி ஆகிய
வேறுபட்ட
நடைகளைப் பெறும்
என்பது
நூலின் இயல்புகள்
இவற்றுள்
(நூலின் இயல்புகளில்)
ஒன்றான
எழுவகை
கொள்கைகள்
தழுவியது
என்பது
குறித்து
எழுவகை மதம்
என்ற
தலைப்பின் கீழ்
சற்று
விளக்கமாக
அறிவோம்
இங்கு
மதம்
என்பது
ஆசிரியர்
தனது நூலில்
பின்பற்றும்
மனக்கொள்கை
அது
(மனக்கொள்கை)
பல இருப்பினும்
தலைமை நோக்கி
மதம் ஏழு
என்பது
நூல் வழக்கு
எழுவகை
கொள்கைகள்
ஒன்று
பிறர்
கொள்கைக்கு
உடன்படுவது
இரண்டு
பிறர்
கொள்கையை
மறுப்பது
மூன்று
பிறர்
கொள்கைக்கு
உடன்பட்டு
பின்பு
மறுப்பது
நான்கு
தானே
ஒன்றை உருவாக்கி
தானதை
நிலைநிறுத்துவது
ஐந்து
இருவரின்
மாறுபட்ட
கொள்கைகளில்
ஒன்றைத் துணிந்து
எடுத்துக்கொள்வது
ஆறு
பிறர்
நூலில் உள்ள
குற்றங்களைக்
காட்டுவது
ஏழு
பிறர்
கொள்கைக்கு
உடன்படானாகி
தன்
கொள்கையினை
ஏற்பது
நன்னூல்
சூத்திரம்-11
எழுவகை
மதமே யுடம்படன் மறுத்தல்
பிறர்தம்
மதமேற் கொண்டு களைவே
தாஅ
னாட்டித் தனாது நிறுப்பே
இருவர்
மாறுகோ ளொருதலை துணிவே
பிறர்நூற்
குற்றங் காட்ட லேனைப்
பிறிதொடு
படாஅன் றன்மதங் கொளலே
எழுவகை மதமே உடம்படன் மறுத்தல்
பிறர்தம் மதமேல் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூல் குற்றம் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே
எழுவகை
கொள்கைகளாவது உடன்படல்,
மறுத்தல், பிறர் கொள்கைக்கு உடன்பட்டு
பின்பு மறுத்தல்,
தானே ஒன்றைத் தாபித்து
தான் அதை நிலைநிறுத்தல், இருவரின்
மாறுபட்ட கொள்கைகளில்
ஒன்றைத் துணிந்து
எடுத்துக்கொள்ளல், பிறர் நூலில் உள்ள
குற்றங்களைக் காட்டல் மற்றும்
பிறர்
கொள்கைக்கு உடன்படானாகி
தன் கொள்கையினைக் கொள்ளல்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – எழுவகை மதம்
No comments:
Post a Comment