ஒரு நூலுக்கு
முன்னுரை போல்
அமையும் பகுதி
பாயிரம்
நன்னூல்
ஆசிரியர்
பவணந்தி முனிவர்
ஆயிரம் முகத்தான்
அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது
பனுவல் அன்றே
(பனுவல் –
நூல் / புத்தகம்)
ஆயிரம் உறுப்புகளால்
விரிந்தது ஆயினும்
பாயிரம் இல்லாதது
நூல் அன்று
என
இதன்
முக்கியத்துவம்
குறித்து
எடுத்துரைக்கின்றார்
முகவுரை
பதிகம்
அணிந்துரை
நூன்முகம்
புறவுரை
தந்துரை
புனைந்துரை
பாயிரம்
என்பன
ஒரு பொருள்
தரும்
பல சொற்கள்
(ஒருபொருட்கிளவி)
இது
(பாயிரம்)
ஒரு நூலில்
சிறப்புப்பாயிரம்
பொதுப்பாயிரம்
என
இரு வகைகளில்
அமையும்
சிறப்புப்பாயிரம்
என்பது
அது
இடம்பெறும்
நூலுக்குரிய
முக்கியமான
விவரங்கள் கொண்டு
அமைவது
பொதுப்பாயிரம்
என்பது
பொதுவாக
எல்லா
நூல்களுக்கும்
உரிய
பொதுவான
விவரங்கள் கூறி
அமைவது
நன்னூல்
சூத்திரம்-2
பாயிரம்
பொதுச்சிறப் பெனவிரு பாற்றே
பாயிரம்
பொதுச்சிறப்பு எனஇரு பாற்றே
பாயிரமானது
பொதுப்பாயிரம்
சிறப்புப்பாயிரம்
என
இரண்டு வகைப்படும்
-
கவிஞர்
பொன். இராஜன் பாபு
-
Author P.
Rajan Babu
தமிழ் இலக்கணம் – பாயிரத்தின் வகை
No comments:
Post a Comment